- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகருவளையம் மறைய டிப்ஸ்

கருவளையம் மறைய டிப்ஸ்

- Advertisement -

கண்ணுக்கு கீழே தோன்றக் கூடிய கருவளையம் பெரும்பாலும் சோர்வு மற்றும் தூக்கமின்மையால் அதிகம் உண்டாகக் கூடியது. அலர்ஜி, மரபியல் என்று மற்ற பல காரணங்கள் இருந்தாலும் கருவளையம் தோன்ற வாய்ப்புகள் உண்டு. இந்த கருவளையம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வரக் கூடியதாக இருக்கிறது. இதனை விரட்டி அடிப்பதற்கு என்ன செய்யலாம்? என்னும் தகவல்களை தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.

போதுமான தூக்கம் இல்லாதவர்ககளின் கண்களை சுற்றி கண்டிப்பாக இது போல கருவளையங்கள் தோன்றுவதற்கு 90 சதவீதம் வாய்ப்புகள் உண்டு. கண்களுக்கு கொடுக்கும் அதிகமான வேலை பளுவால் அயற்சியாகி, ரத்த ஓட்டம் சரியாக இல்லாமல், கருந்திட்டுகளாக படிந்து போகிறது. போதுமான ஓய்வு, கண்களுக்கு பயிற்சியும் கொடுத்தால் விரைவிலேயே கருவளையத்தை துரத்தி அடிக்கலாம்.

- Advertisement -

கருவளையம் நீங்க டிப்ஸ் :

கருவளையம் காணாமல் போக மிக்ஸர் ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துண்டு உருளைக்கிழங்கு, ஒரு துண்டு வெள்ளரிக்காய் ஆகியவற்றை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்ததை ஒரு வடிகட்டியில் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வடிகட்டிய சாற்றுடன் தேவையான அளவிற்கு காபி பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அதனுடன் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் எது உங்களிடம் இருக்கிறதோ, அதை நான்கிலிருந்து ஐந்து சொட்டுக்கள் வரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக அரை ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு இதை நைசாக பேஸ்ட் போல கலக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கண்களை சுற்றி கருவளையம் இருக்கும் பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். ஒரு ரெண்டு நிமிடம் ஆள்காட்டி விரலால் மென்மையாக கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் அப்படியே காய விட்டு விடுங்கள். நன்கு காய்ந்து உலர்ந்ததும் ஒரு ஈரத் துணியை வைத்து துடைத்து சுத்தம் செய்து விடுங்கள்.

- Advertisement -

ஒரே நாளில் எந்த ஒரு பொருளையும் வைத்து கருவளையத்தை விரட்டி அடிக்க முடியாது. மேலே தயாரித்த பேஸ்ட்டை பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். தொடர்ந்து தினமும் தடவி வர 10லிருந்து 15 நாட்களுக்குள் நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்க ஆரம்பிக்கும். தொடர்ந்து இதை தடவி வரும் பொழுது கருவளையம் நிரந்தரமாக தங்கி விடாமல் எளிதாக விரட்டி அடித்து விட முடியும்.

இதையும் படிக்கலாமே:
ஹனுமனை வீடு தேடி வர வைக்கும் மந்திரம்

கருவளையம் வரும் பொழுது ஆரம்பத்திலேயே அதை சரியாக கவனிக்க வேண்டும். போதுமான ஓய்வு கண்களுக்கு கொடுக்க வேண்டும். குறிப்பாக ஒளி இல்லாத இடத்தில் அதிக வெளிச்சத்தை கண்களுக்கு காண்பிப்பது தவிர்க்க வேண்டும். இரவு விளக்குகளை அணைத்த பிறகு மொபைல் போன் பார்ப்பது, லேப்டாப் நோண்டுவது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது. ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை நன்கு தூங்கினாலே கருவளையம் மறைய ஆரம்பிக்கும். கண்ணுக்கு கீழே பை போல (eye bag) தோன்றினால் ஐஸ் கியூப் அல்லது ஜில்லென்று இருக்கும் ஸ்பூனினால் லேசாக ஒத்தடம் கொடுங்கள். இப்படி செய்யும் பொழுது நன்கு ரத்த ஓட்டம் கிடைத்து வீக்கம் சரியாகும்.

சற்று முன்