வருடக்கணக்கில் கண்ணுக்குக் கீழே இருந்த கருவளையத்தின் அடையாளம் கூட தெரியாது. 5 நாட்களில் கண் கருவளையத்தை போக்க சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!

eye

சில பேருக்கு சிறுவயதிலிருந்தே கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கும். சில பேருக்கு வேலை பளுவின் காரணமாக, கணினி, கைபேசி, போன்ற பொருட்களை தொடர்ந்து உற்று நோக்குவதன் காரணமாக, கண்ணாடி அணிவதன் மூலமாகக் கூட கருவளையம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு கண்கருவளையம் எப்படி இருந்தாலும் சரி, அந்த கருவளையத்தை அடியோடு சரிசெய்ய, அந்த கருவளையத்தை அடையாளம் கூட இல்லாமல் சரி செய்ய, இயற்கையான முறையில் இருக்கக்கூடிய சில வழிமுறைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

eye-problem2

இதை தொடர்ந்து 5 நாட்கள் பயன்படுத்தி வந்தாலே உங்களுக்கு வித்தியாசம் தெரிய தொடங்கும். கண்கருவளையம் குறைவதை உணர்வீர்கள். உங்களுடைய கண்ணை உங்களுடைய மொபைலில் ஒரு ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து நாள் கழித்து மீண்டும் ஒரு ஃபோட்டோ எடுத்து பாருங்கள். வித்தியாசத்தை உணர முடியும்.

முதல் குறிப்பாக ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக துருவி, துருவிய உருளைக்கிழங்கை உங்களது கைகளால் பிழிந்து எடுத்தால் 2 ஸ்பூன் அளவு உருளைக்கிழங்கு சாறு கிடைக்கும். உருளைக்கிழங்கு சாறுடன் கொஞ்சமாக கோதுமை மாவை கலந்து கொள்ளுங்கள். 1/2 ஸ்பூன் கோதுமை மாவு கலந்தால் கூட போதும். இது ஒரு கொழகொழப்பு பேஸ்டாக உங்களுக்கு கிடைக்கும். இதைத் தொட்டு உங்களுடைய கண்ணை சுற்றி முன்பக்கம் பின்பக்கம் என்று வட்ட வடிவில் மசாஜ் செய்து, அப்படியே விட்டு விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து கூட கழுவிக் கொள்ளலாம். இதேபோல வாரத்தில் ஐந்து நாட்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.

eye1

இரண்டாவது குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் கடுக்காய். கடுக்காய் பொடி வாங்க வேண்டாம். கடுக்காயை, முழு கடுக்காயாக வாங்கி அதை மஞ்சள் இழைக்கும் கல்ளிலோ அல்லது சொரசொரவென்று இருக்கும் தரையிலோ அம்மிக்கல்லிலோ கொஞ்சமாக தண்ணீர் விட்டு குழைத்து கொள்ள வேண்டும். நீங்கள் இழைக்க போகும் இடத்தை முதலில் நன்றாக தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவி விடுங்கள். ஏனென்றால் இந்த கலவையை கண்களில் போட போகின்றோம்.  இழைத்த கடுக்காய் விழுதை கண்ணை சுற்றி தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இதை வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்தால் போதும்.

அடுத்தபடியாக இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, கொஞ்சமாக விளக்கெண்ணை ஒரு சொட்டு, இரண்டு கைகளில் இருக்கும் மோதிர விரலில் தொட்டுக்கொண்டு, இரண்டு கண்களில் இருக்கும் கருவளையம் மேல், மெல்லமாக வட்ட வடிவத்தில், முன் பக்கமும் பின் பக்கமும் மாற்றி மாற்றி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்து அப்படியே விட்டு விட வேண்டும். இது இரவு முழுவதும் உங்கள் கண்களில் இருக்கலாம். மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். இதை செய்தால் உங்களுடைய கண்களும் அழகாக மாறும்.

முதலில் சொல்லப்பட்ட உருளைக்கிழங்கு சாறு குறிப்பை காலையில் 1 மணி நேரம் பேக் போட்டுக் கொள்ளுங்கள். மாலை நேரத்தில் கடுக்காயை இழைத்து உங்களுடைய கண்களில் பூசிக்கொள்ளலாம். இரவு விளக்கெண்ணை இப்படியாக மூன்று குறிப்பையும் பின்பற்றினால் சீக்கிரமே ரிசல்ட் தெரியும். முடியவில்லை என்பவர்கள் மூன்றில் உங்களுக்கு எது சுலபமாக சௌகரியமாக உள்ளதோ அதை பின்பற்றினாலும் கூட, கூடிய விரைவில் நல்ல பலனை பெறமுடியும் முயற்சி செய்து பாருங்கள்.