கண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையத்திற்கு வெறும் 15 நாட்களில், நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெஸ்ட் ரிசல்ட் கிடைக்கும். இந்த மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!

eye

கண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையம் கட்டாயமாக நம்முடைய அழகை பாதிக்கும். நோயாளி போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும். இதை சரிசெய்வதற்கு இன்று வீட்டிலேயே நாம் ஒரு கிரீம் தயார் செய்யப் போகின்றோம். கட்டாயமாக உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த கிரீமை தயார் செய்ய முடியாது. கடைகளில் இருந்து சில பொருட்களை வாங்கி தயார் செய்ய போகின்றோம். இதற்கான செலவும் கொஞ்சம் ஆகத்தான் செய்யும். உங்களுக்கு பிடித்திருந்தால், நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த பொருட்களை வாங்கி இந்த கிரீமை தயார் செய்து முயற்சி செய்து பாருங்கள். கட்டாயமாக 15 நாட்களில் நம்பமுடியாத அளவிற்கு கருவளையம் குறைவதை காண முடியும்.

முதலில் இந்த கிரீம் செய்ய தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். அலோ வேரா ஜெல், வைட்டமின் E ஆயில், பாதாம் ஆயில் இந்த 3 பொருட்கள் கட்டாயம் நமக்கு தேவைப்படும். அலோ வேரா ஜெல் உங்களுக்கு இயற்கையாக கிடைத்தாலும் பரவாயில்லை. அப்படி இல்லை என்றால் கடைகளில் இருந்து நல்ல பிராண்ட் ஆக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு சிறிய பௌலில் 1 டேபிள்ஸ்பூன் அலோ வேரா ஜெல், 7 லிருந்து 10 சொட்டு வைட்டமின் E ஆயில், 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய், இந்த 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கி கொண்டால், ஒரு ஜெல் நமக்கு கிடைக்கும். இந்த ஜெல்லை கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள்.

vitamin-E-oil

தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இரண்டு கைகளிலும் இருக்கக்கூடிய, மோதிர விரலால் இந்த ஜெல்லை, ஒரு சொட்டு தொட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு கண்களிலும், மோதிர விரல்களை வைத்து வட்ட வடிவில் முன்னும் பின்னுமாக 10 நிமிடங்கள் ஜென்டில் மசாஜ் செய்து கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு அப்படியே உங்களது கண்களை மூடிக்கொண்டு, தூங்கச் சென்றுவிடுங்கள். மறுநாள் காலை எப்போதும் போல குளிர்ந்த நீரில் முகத்தை அலம்பிவிட்டு, வட்டமாக வெட்டிய வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இப்படி எது உங்கள் வீட்டில் இருக்கின்றதோ அதை எடுத்து கண்களின் மேலே வைத்துக்கொண்டு, 10 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள்.

badam-oil

இதே போல தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால், நீங்களே உங்கள் கண் கருவளையத்தில் இருக்கும் வித்தியாசத்தை பார்க்க முடியும். இந்த குறிப்பை தொடர்ந்து முயற்சி செய்து வரும் பட்சத்தில் கண் கருவளையம் கண்ணுக்கே தெரியாமல் 100% காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

அதிகமாக நீங்கள் கணினியோ அல்லது கைபேசியை அல்லது கண்ணாடி போடுபவர்களாகவும் இருந்தால், இந்த கண் கருவளையம் குறைவதற்கு கொஞ்சம் நாட்கள் அதிகமாக தான் எடுக்கும். தொடர்ந்து கருவளையம் வராமல் இருக்க தினம்தோறும் இந்த க்ரீமை தாராளமாக பயன்படுத்தி வரலாம். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது.

eye1

இதோடு சேர்த்து உங்களுடைய உணவு பழக்கவழக்கங்களில் கொஞ்சம் மாறுதல்களைக் கொண்டு வாருங்கள். இரும்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக தூங்க வேண்டும். மனக்கவலை இருக்கக் கூடாது‌. இப்படி உடல் ரீதியாக சில பாதிப்புகள் இருந்தாலும் கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் சீக்கிரம் சரியாகாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.