- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்கார்த்திகை தீப விளக்கு காற்றில் அணையாமல் இருக்க டிப்ஸ்

கார்த்திகை தீப விளக்கு காற்றில் அணையாமல் இருக்க டிப்ஸ்

- Advertisement -

நாளைய தினம் 13-12-2024 வெள்ளிக்கிழமை கார்த்திகை தீப பண்டிகை நாள். அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. காற்றும் வீசிக் கொண்டிருக்கிறது. உங்கள் வீட்டு வாசலில் எரியும் விளக்கு மட்டும் அணியாமல் அப்படியே முத்து முத்தாக எரிய வேண்டுமா. அந்த தீப சுடரில் நீங்கள் அண்ணாமலையானை தரிசனம் செய்ய வேண்டுமா. இதோ பயனுள்ள வீட்டு குறிப்பு இந்த பதிவில் உங்களுக்காக.

தீபம் அணையாமல் எரிய டிப்ஸ்

கற்பூரம் இருந்தால் போதுங்க. உங்கள் வீட்டு கார்த்திகை தீப விளக்குகள் அணியாமல் எரியும். ஆனால் அந்த கற்பூரத்தை எப்படி எல்லாம் விளக்கேற்றும் போது பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றிய சூட்சமமான சில குறிப்புகளை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். வாங்கிய மண் அகல் விளக்குகளை எல்லாம் முதலில் தண்ணீரில் ஊறவைத்து கொஞ்சம் ஃபேன் காற்றிலேயே காய வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தண்ணீரில் மண் அகல் விளக்குகளை ஊறவைத்து கழுவவில்லை என்றால், எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் அந்த மண்அகல் தனக்குள்ளே உறிஞ்சிக் கொள்ளும். சீக்கிரம் மண் அகல் விளக்கில் எண்ணெய் தீர்ந்து போகும். மழையால் விளக்குகளை தண்ணீரில் போட்டு ஊற வைத்து கழுவி காய வைக்க முடியவில்லையா. அதற்கும் ஒரு சூப்பர் ஐடியா இருக்கிறது.

புது மண் அகல் விளக்குகளுக்கு உள்ளே கொஞ்சமாக முகத்திற்கு போடும் பவுடரை கொட்டி தடவி விடுங்கள். அப்படி இல்லை என்றால் மைதா மாவு, கான்பிளவர் மாவு எந்த மாவு இருந்தாலும் மண் அகல் விளக்குகளுக்கு உள்ளே, அந்த மாவை  தூவி விரல்களாகவே பரவலாக தடவி விட்டு விடுங்கள். பிறகு இதன் மேலே நல்லெண்ணெய் ஊற்றினால் எண்ணெய் ஓரளவுக்கு அகல் விளக்கில் உறிஞ்சாமல் இருக்கும்.

- Advertisement -

கொஞ்சம் கற்பூரத்தை நன்றாக இடித்து தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மல்லிகைப்பூ பஞ்சு திரி வீட்டிலேயே தயார் செய்து கொள்ளுங்கள். திரி தயாரிக்க பஞ்சு, நாட்டு மருந்து கடைகளில் குறைந்த விலைகளில் கிடைக்கும். அந்த பஞ்சை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த பஞ்சை கொஞ்சமாக விரித்து அதன் நடுவில் கொஞ்சம் கற்பூர தூள் வைத்து பிறகு அதை மல்லிகைப்பூ திரி போல தயார் செய்து கொள்ள வேண்டும்.

இந்த பஞ்சு திரிக்கு உள்ளே கற்பூரம் இருக்கிறது. பஞ்சு திரிக்கு மேல் பகுதியிலும் கொஞ்சம் தூள் கற்பூரத்தை தடவி விட வேண்டும். அகல் விளக்கில் ஊற்றும் எண்ணெயிலும் கொஞ்சம் கற்பூரத்தை தூள் செய்து தூவி விடுங்கள். பிறகு இந்த மல்லிகை பூ பஞ்சு திரியை மண் அகல் விளக்கு நடுவே வைத்து தீபம் ஏற்றினால், உங்கள் மண் அகல் விளக்கானது காற்றின் அணியாமல் எரியும். நல்லெண்ணெய்யோடு கற்பூரம் சேரும்போது, அந்த தீபத்திற்கு ஒரு சக்தி கிடைக்கும்.

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு நீளமான பஞ்சு திரி தான் தேவை என்றால், அந்த பஞ்சை நன்றாக விரித்து வைத்து, அதன் நடுவே கற்பூரத்தூள் தூவி பிறகு பஞ்சை சுருட்டி நீளமாக திரி தயார் செய்து கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: மண் அகல் விளக்கில் எண்ணெய் கசியாமல் இருக்க.

காற்று வீசும் போது அணையாமல் அந்த கற்பூரம் பார்த்துக் கொள்ளும். இந்த கார்த்திகை தீபத்திற்கு மேல் சொன்ன குறிப்புகளை பின்பற்றித்தான் பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய மண் அகல் விளக்கு தீபச்சுடர் அழகாக எரியும். காற்றில் அணியாமல் எரியும். இந்த குறிப்புகளில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்