தீபாவளி சிறப்பு பரிகாரங்கள்

deepavali

பண்டிகைகள் என்றாலே அனைவருக்கும் ஒருவித உற்சாகம் மற்றும் மனமகிழ்ச்சி உண்டாகிறது. நமது நாட்டின் அனைத்து பண்டிகைகளுமே இறைவனை வழிபடுவதை மையமாக கொண்டே கொண்டாடப்படுகிறது. இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், நமக்கு நல்வாழ்க்கையை அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தியே இருக்கின்றன. அப்படி நமது வாழ்வில் இருக்கும் தீமைகள் எனும் இருளை போக்கி, வெளிச்சத்தை தரும் ஒரு பண்டிகையாக “தீபாவளி” பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிறப்பான இந்த பண்டிகை தினத்தில் ஒரு சில பரிகாரங்கள் மற்றும் பூஜை முறைகளை பின்பற்றுவதால் நாம் பல நன்மைகளை பெற முடியும். அவை என்ன என்பதை இங்கு காண்போம்.

பெரியவர்கள் குழந்தைகள், ஜாதி, மொழி, இன வேறுபாடுகள் கடந்து அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு விழாவாக தீபாவளி திருநாள் இருக்கிறது. இந்த தீபாவளி நன்னாள் தொடங்கி வருடம் முழுவதும் உங்களின் வாழ்வில் பொன், பொருள் போன்றவற்றின் சேர்க்கையும், நோய்கள் அண்டாத உடல்நலமும், ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் மற்றும் சகல சௌபாக்கியங்கள் பெறவும் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு விரிவாக காண்போம்.

தீபாவளி அன்று அதிகாலை எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது, குளிக்கின்ற நீரில் சில துளிகள் தூய்மையான பசும்பால் விட்டு அந்நீரை நன்கு கலந்த பிறகு அந்நீரை ஊற்றி குளிப்பதால் உங்களுக்கு லட்சுமி யோகம் ஏற்படும். உங்களை பீடித்திருக்கும் தரித்திரம் நீங்கும்.

தீபாவளி திருநாளில் வீட்டில் பூஜை செய்யும் சமயத்தில் லட்சுமி படத்திற்கு முன்பு 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை ஆகியவற்றோடு வெள்ளி நாணயங்கள் வைத்து பூஜை செய்வதால் உங்கள் வீட்டில் எல்லாக்காலங்களிலும் மிகுந்த பொருள் வரவு வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

தீபாவளி திருநாள் அன்று பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு உங்கள் வசதிக்கேற்ப புத்தாடைகள், இனிப்புகள் போன்றவற்றை தானமளித்தால் மகாலட்சுமியின் கடை கண் பார்வை உங்கள் மீது பட்டு உங்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்.

mahalakshmi

சுபமான தீபாவளி தினத்தில் பசுமாடுகள் மற்றும் குரங்குகளுக்கு சாப்பிட பழங்களை அளிப்பது உங்களின் எப்பேர்ப்பட்ட பாவங்களின் கர்ம வினைகளையும் நீக்கும். கோவில்களுக்கு சென்று வழிபட்ட பிறகு கோவில்களில் இருக்கும் திருக்குளத்தில் இருக்கும் மீன்களுக்கு சிறு சிறு கோதுமை மாவு உருண்டைகளை உணவாக அளிக்க வேண்டும்.

நம் தமிழ்நாட்டில் பலரின் வீடுகளில் தீபாவளி என்றாலே அன்று ஊண் உணவை சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த தீபாவளி தினம் மற்றும் அதன் மறுநாளான அமாவாசை தினத்தன்றும் புலால் உணவுகளை உட்கொள்ளவதை தவிர்ப்பதால் மறு வருட தீபாவளி வரும் காலம் வரை வாழ்க்கையிலும், பொருளாதார ரீதியிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் காக்கும் ஒரு எளிய வழிமுறையாகும்.

தீபாவளி அன்று சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் லட்டுகள் செய்து குபேரன் மற்றும் மகாலட்சுமி தேவியை வழிபடுபவர்ளுக்கு மகாலட்சுமி மற்றும் குபேரன் ஆகிய இருவரின் ஆசிகளும் கிடைத்து எடுக்கும் அத்தனை முயற்சிகளிலும் மிகுந்த தன லாபத்தை சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
வாழ்க்கை முழுவதும் வளம் கொழிக்கச் செய்யும் தீபாவளி விரதம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Deepavali poojai tips in Tamil.