ஐ.பி.எல். தொடரின் டெல்லி அணி வீரர்களின் புதிய சீருடை அறிமுகம். ஆஹா செமயா இருக்கு – புகைப்படம் உள்ளே

Dd

இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் மார்ச் 29 ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இதில் கடந்த ஆண்டு சாம்பியனான சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.

CSK

அதனை தொடர்ந்து மற்ற அணிகளின் போட்டிகளும் தொடர்ந்து விளையாட உள்ளன. மேலும், இந்த வருடத்தின் முதல் அணியாக புதிய சீருடையை டெல்லி நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது. சென்ற வருடம் இறுதியில் டெல்லி அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இந்த தொடரில் அவர்களின் முக்கியத்துவத்தினை காண்பித்துள்ளனர்.

இளம்வீரர்கள் பலரை கொண்ட இந்த அணி நிச்சயம் இந்த தொடரில் சாதிக்கும் என டெல்லி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதோ டெல்லி வீரர்களின் புதிய சீருடை :

பிரிதிவி ஷா, தவான், பண்ட் மற்றும் ஐயர் என தரமான பேட்ஸ்மேன்கள் பலர் இருப்பதால் இந்த தொடரில் கண்டிப்பாக டெல்லி அணி சாதிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிக்கலாமே :

தோனி நீங்கள் கூலாகவே இருங்கள். ஆனால், நான் அப்படி இல்லை உங்களின் சாதனைகளை நான் முறியடிப்பேன் என்று தோனிக்கு சவால் விடுத்த இளம் வீரர் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்