உடலிலுள்ள எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கும் முட்டை பரிகாரம்

muttai-parigaaram

எந்த காரியம் எடுத்தாலும் தடங்கல், எப்போதும் தோல்வி பற்றிய சிந்தனை, மனக்கவலை போன்ற எதிர் மறை சக்திகளை நம் உடலில் இருந்து விரட்டுவதற்கான மிக எளிய ஒரு பரிகாரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

Egg

இந்த பரிகாரத்தை முதன் முதலில் அம்மாவாசை நாள் அன்றே துவங்க வேண்டும். அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். இதற்கு தேவையானது 2 கோழி முட்டைகள் மட்டுமே.

முட்டை பரிகாரம் செய்யும் முறை

குளியல் அறைக்கு சென்று உடைகள் அனைத்தையும் கலைந்துவிட்டு கிழக்கு நோக்கி நின்றுகொள்ளவும். பின்பு ஒரு முட்டையை எடுத்து அதை உப்பு நீரால் கழுவிவிட்டு பின்பு எலுமிச்சை நீரால் கழுவவும். பின்பு கண்களை மூடிக்கொண்டு, உங்கள் உடம்பில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளையும் விரட்டும்படி பிரபஞ்சத்திடம் வேண்டிக்கொள்ளவும். பின்பு  ஒரு முட்டையை எடுத்து உங்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து பகுதிலளிலும் படும்படி தடவவும்.

Egg

கழுத்தின் பின் புறம், கை கால்களின் முட்டிகளின் பின்புறங்களில் நன்கு தேய்க்கவும். இந்த இடங்களில் தான் எதிர் மறை சக்திகள் அதிகம் தங்கும்.முட்டையை தேய்க்கும்போது எங்காவது வலி இருந்தால் அந்த இடத்தை பிரத்யேகமாக கவனித்து தடவி கொள்ளவும். இப்படி உடல் முழுக்க முட்டையால் தடவுவதால் உடலில் உள்ள அனைத்து எதிர்மறை சக்திகளையும் முட்டை கிரகித்துக்கொள்ளும்.

- Advertisement -

பிறகு அந்த முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்துவிட்டு பார்க்கவும். முட்டையில் குமிழியோ அல்லது கொப்பளமோ வந்தால் எதிர்மறை சக்திகள் எடுக்கப்பட்டு விட்டது என அறிந்து கொள்ளவும். சாரங்களாக வந்தால் மேலும் எடுக்கப்பட வேண்டும் என அர்த்தம்.

Eggமுட்டையை நன்கு ஆராய்ந்த பிறகு அதை கழிவறையில் ஊற்றிவிடவும். பிறகு எலுமிச்சைசாரோடு சிறுது கல் உப்பும் சேர்த்து கழிவறையை கழுவிவிடவும். அதன் பிறகு குளித்துவிட்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கிக்கொள்ளவும்.

அதன் பிறகு இரவில் நீங்கள் தூங்கும் சமயத்தில் ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக்கொண்டு அதில் மற்றொரு முட்டையை போட்டு உங்கள் தலைமாட்டில் மூன்று நாட்கள் வைத்துக்கொள்ளவும். இந்த மூன்று நாட்களும் பாத்திரத்தில் உள்ள நீரை மாற்றிக்கொள்ளலாம். நாகவது நாள் அந்த முட்டையை தெரு சாக்கடையில் எரிந்து விடவும்.

இப்படி செய்வதன் மூலம் நம் உடம்பில் உள்ள எதிர்மறை சக்திகள் அனைத்து விலகிச்செல்லும் என்று நம்பப்படுகிறது. இந்த முறை மேலை நாடுகளில் மிகவும் பிரபலம்.

இதையும் படிக்கலாமே:
எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் இல்லாமல் வாழலாம்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கம் பஞ்சாங்க குறிப்புகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.