எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் இல்லாமல் வாழலாம்

annapurani
- Advertisement -

நம் சாஸ்திரத்தில் இல்லாத தகவல்களே கிடையாது என்றால் மிகையாகாது. சாப்பாடு பற்றி கூட நம் சாஸ்திரத்தில் தகவல் உண்டு. எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது. எதை சாப்பிடுவது நல்லது இப்படி பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

சாப்பாடை வேறொருவர்  பரிமாறியே நாம் சாப்பிடவேண்டுமே தவிர நமக்கு நாமே பரிமாறிக்கொண்டு  சாப்பிடக்கூடாது. அப்படி செய்வதால் ஆயுள் குறையும்.

- Advertisement -

இரவு நேரங்களில் கஞ்சி, கட்டித்தயிர், கீரை,  நெல்லிக்காய்,  பாகற்காய், இஞ்சி போன்றவற்றை சாப்பிடும் வீட்டில் லட்சுமி குடியிருக்கமாட்டாள்.  அதேபோல் இரவு நேரங்களில் பால் சோறு சாப்பிடுவதில் தவறில்லை.

நெய், உப்பு, சோறு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது.
கரண்டி  போன்று வேறு ஏதாவது வைத்தே எடுக்கவேண்டும்.

கிழக்கு திசை நோக்கி ஒருவர் அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும்.
மேற்கு திசை நோக்கி ஒருவர் அமர்ந்து சாப்பிட்டால் பொருள் சேரும்.
தெற்கு திசை நோக்கி ஒருவர் அமர்ந்து சாப்பிட்டால் புகழ் வளரும்.
வடக்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது. அப்படி சாப்பிடுவதால் நோய் வரும்.

- Advertisement -