வாழ்க்கையில் பல்வேறு முயற்சிகளிலும் தடை ஏற்படுகிறதா? வாயை திறந்தாலே பிரச்சனை தேடி வருகிறதா? ராகு பகவானுக்கு இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாமே.

pariharam
- Advertisement -

ஒரு மனிதன் தீவிர இறைநம்பிக்கையாளனாக இருந்தாலும் சரி அல்லது தீவிர இறை மறுப்புக் கொள்கை கொண்டவனாக இருந்தாலும் சரி. இந்த இரு பிரிவு மனிதர்களும் உறுதியாக நவ கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்டே தான் இப்பூமியில் வாழ்வதாக பல வருடம் அனுபவம் வாய்ந்த ஜோதிட சாஸ்திர நிபுணர்களின் திடமான கருத்தாக உள்ளது. இந்த ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகம் “கோள்” அமைப்பு கொண்டது. ஆனால் ராகு-கேது எனப்படும் கிரகங்களுக்கு கோள் இல்லை. அவை “நிழல் கிரகங்கள்” என அழைக்கப்படுகின்றன. குறிப்பாக சூரிய மற்றும் சந்திர கிரகண காலங்களில் ஏற்படுகின்ற நிழல் தான் ராகு – கேது கிரகங்கள் என கருதப்படுகின்றன. இத்தகைய சக்தி வாய்ந்த இரு கிரகங்களில் “ராகு’ கிரகத்தை பற்றியும், அந்த ராகு கிரகத்தை எப்படி வழிபடுவது? அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பது குறித்தும் இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு நபருக்கு மிகுதியான நற்பலன்களை கொடுக்கும் சக்தி கொண்ட கிரகமாக குரு கிரகம் கருதப்படுகிறது. அந்த குரு கிரகத்தை காட்டிலும் அதிக நற்பலன்களை தரும் சக்தி வாய்ந்த கிரகமாக சுக்கிரன் என கூறப்படுகிறது. இந்த இரண்டு கிரகங்களும் பொதுவாக எந்த ஒரு ஜாதகருக்கும் கெடுபலன்களை காட்டிலும் நற்பலன்கள் அதிகம் கொடுப்பதால் இவை சுப கிரகங்களாக கருதப்படுகின்றன. ஆனால் ஒரு ஜாதகருக்கு குரு, சுக்கிரனை காட்டிலும் மிகுதியான நற்பலன்களையோ அல்லது சனி கிரகத்தை காட்டிலும் மிகுதியான கெடுபலன்களையோ கொடுக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக நிழல் கிரகங்களில் ஒன்றாக “ராகு” கிரகம் கருதப்படுகிறது.

- Advertisement -

பொதுவாக ராகு பகவான் ஒரு ஜாதகருக்கு அதி வீரம், கூச்ச சுபாவம், போராட்ட குணம், புரட்சிகரமான எண்ணங்கள், சிந்தனை, பேச்சு போன்றவை, அணுசக்தித் துறை, மின்சாரத் துறை பணிகள், ராணுவம், விண்வெளி ஆய்வு பணிகள், விஷம் நிறைந்த விலங்குகளை கையாளுதல், திமிர் பேச்சு, தவறான வழிகளில் பொருள் ஈட்டுதல், வேற்று மத இன மனிதர்களின் நட்பு, வெளிநாட்டு வாழ்க்கை, வைரஸ் கிருமிகளால் ஏற்படக்கூடிய நோய்கள் போன்றவற்றுக்கு காரகத்துவம் கொண்ட கிரகமாக விளங்குகிறார். ஜாதக கட்டத்தில் அவர் அமர்ந்திருக்கும் இடத்தை பொறுத்து இதில் நன்மையும் தீமையும் ஜாதகருக்கு அமைகிறது.

எனவே எந்த ஒரு நபரும் தங்கள் வாழ்வில் நவகிரக வழிபாடு செய்யும் சமயம் மற்ற கிரகங்களை காட்டிலும் ராகு பகவானை சாந்தி படுத்தும் பூஜை செய்து வழிபடுவது மிகவும் நல்லது. தற்காலங்களில் பெரும்பாலானோர் செவ்வாய் கிழமை வருகின்ற ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழிபாடு ராகு கிரகத்தால் ஏற்படவிருக்கின்ற தீய பலன்களை குறைத்து, நற்பலன்களை அதிகப்படுத்தும்.

- Advertisement -

முடிந்தால் வாரத்தில் செவ்வாய் கிழமை மட்டுமல்லாது அனைத்து கிழமைகளிலும் ராகு கால வேளையில் நவக்கிரக சந்நிதிக்கு சென்று ராகு பகவான் துர்க்கை அம்மன் அல்லது பைரவர் போன்ற தெய்வங்களுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் ராகு கிரகத்தின் தீய தாக்கங்கள் விரைவாக குறைவதோடு, உங்களின் வேண்டுதல் விரைவாக நிறைவேற வழிவகுக்கும். இந்த வழிபாட்டை தினமும் வேலைக்கு செல்பவர்களால் செய்ய முடியாவிட்டாலும், அவர்களின் சார்பாக, அவர்களின் குடும்பத்தினர் எவரேனும் செய்யலாம்.

தற்காலங்களில் பலரும் வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். ஒரு மனிதருக்கு வெளிநாட்டு வாசத்தை கொடுக்கக் கூடிய சக்தி கொண்ட கிரகமாக ராகு பகவான் இருக்கிறார். எனவே ஜாதகத்தில் பாதகமான நிலையில் ராகு கிரகம் இருந்தாலும், செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் ராகுகால நேரத்தில், ராகு பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி, ராகு ஸ்தோத்திரம் அல்லது பைரவர் அஷ்டகம் துதித்து வழிபாடு செய்து வந்தால் நீங்கள் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் விரைவில் வெற்றி உண்டாகும்.

மேலும் வாழ்வில் ராகு பகவானால் தீய பலன்கள் ஏற்படாமல் நற்பலன்கள் மட்டும் உண்டாக வருடத்திற்கு ஒரு முறை திருநாகேஸ்வரம், நாகர்கோவில் போன்ற ஊர்களில் இருக்கும் ராகு பரிகார கோவில்களுக்கு சென்று ராகு சாந்தி பூஜை அல்லது ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும். திருநாகேஸ்வரம் வரை செல்லமுடியாத சென்னை வாசிகள் குன்றத்தூரில் வீற்று அருள்பாலிக்கும் திருநாகேஸ்வரரை வணங்கலாம்.

- Advertisement -