உங்கள் வீட்டில் அள்ள அள்ள செல்வவளம் குறையாமல் இருக்க, நாளை மாலை பூஜையறையில் இந்த 1 பொருளை வைத்து வழிபாடு செய்தாலே போதும்.

gupera-poojai1
- Advertisement -

நாளை தீபாவளி. இந்த தீபாவளி திருநாள் அன்று நம்முடைய வீட்டில் மகாலட்சுமி தேவியை நினைத்து லட்சுமி குபேர பூஜையை செய்தால், நம் வீட்டில் செல்வ வளம் குறையாமல் இருக்கும் என்பது ஐதீகம். பெரும்பாலும் வட மாநிலத்தில் இந்த லக்ஷ்மி குபேர பூஜையை மிகவும் விமரிசையாக கொண்டாடுவார்கள். நம்முடைய வீட்டில் மிக மிக சுலபமான முறையில் லக்ஷ்மி குபேர பூஜையை எப்படி வழிபடுவது என்பதைப் பற்றிய சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

gupera-poojai3

நாளை தீபாவளி அன்று மாலை 6 மணிக்கு இந்த பூஜையை உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டும். ஒரு சிறிய மண் பானையை வாங்கிக்கொள்ளுங்கள். இதை தான் இப்போது நாம், நம் வீட்டின் அட்சய பாத்திரமாக மாற்றப் போகிறோம். அல்ல அல்ல குறையாத செல்வ வளங்களை உங்களுக்கு கொடுக்கப் போவது இந்த அக்ஷய பாத்திரம் தான்.

- Advertisement -

சிறிய மண் குடுவையை வாங்கி வைத்து விட்டீர்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் சந்தனம் 1 ஸ்பூன், கொஞ்சமாக பன்னீர், அதில் கொஞ்சம் ஜவ்வாது, கலந்து இந்த கலவையை முதலில் வாங்கி வைத்திருக்கும் மண் குடுவையில் மேலே பூசி விடுங்கள். அதன்பின்பு குங்குமத்தை தொட்டு இந்த மண்பானையின் மேலே ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை குங்குமத்தில் எழுதி விடுங்கள்.

gupera-poojai2

இந்த மண் பானைக்கு உள்ளே இரண்டு கைப்பிடி அளவு உப்பைக் கொட்டி விட வேண்டும். உப்புக்கு மேலே மஞ்சள் நிற காட்டன் துணி அல்லது சிவப்பு நிற காட்டன் துணியை விரித்து கொள்ளுங்கள். அதற்கு மேலே உங்களால் முடிந்த ரூபாய் நோட்டுகள் நாணயங்களை வைக்கலாம். இப்போது லட்சுமி குபேர பூஜைக்கு தேவையான அக்ஷய பாத்திரம் தயாராகிவிட்டது. நாளைய லட்சுமி குபேர பூஜையின் மிக மிக முக்கியமாக நாம் வைக்க வேண்டிய ஒரு பொருள் இந்த அக்ஷய பாத்திரம் தான். இதை அப்படியே உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். (பானைக்கு பாதி அளவு உப்புக் கொண்டிருந்தால் போதும். நிரம்ப உப்பு கொட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.)

- Advertisement -

அடுத்தபடியாக தீபங்கள் ஏற்ற வேண்டும். முடிந்தவர்கள் நெய் தீபங்கள் ஏற்றி ஐந்திலிருந்து ஒன்பது தீபங்கள் வரை உங்களால் எத்தனை தீபங்கள் ஏற்ற முடியுமோ அத்தனை தீபங்கள் ஏற்றலாம். அதாவது 5, 7, 9 இந்தக் கணக்கில் உங்களால் முடிந்த தீபங்களை ஏற்றி வையுங்கள் இதில் கட்டாயமாக ஒரே ஒரு தீபத்தில் நெய் ஊற்றி இருக்க வேண்டும். மற்ற தீபங்களில் நல்லெண்ணை ஊற்றி ஏற்றிக் கொள்ளலாம். அது அவருடைய சவுகரியம்.

virali-manjal

மகாலட்சுமிக்கும் முன்பாக கட்டாயமாக ஒரு சிறிய தட்டில் விரலி மஞ்சள் அல்லது கிழங்கு மஞ்சள் இருக்க வேண்டும். அடுத்தபடியாக இலையிலோ அல்லது தட்டிலோ உங்களால் முடிந்த பழ வகைகளை வைக்க வேண்டும். குறிப்பாக மகாலட்சுமிக்கு நாளை பசும்பாலில் செய்யப்பட்ட ஏலக்காய் சேர்த்த முந்திரி உலர் திராட்சை சேர்த்து மணக்க மணக்க பாயசம் நிவேதனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

gupera-poojai4

நாளையதினம் லக்ஷ்மி குபேர பூஜையில் முதலிடம் மகாலட்சுமி தேவிக்கு தான்‌. மகாலட்சுமி தேவியை வழிபட்டதால் தான் குபேரருக்கு, அளவில்லா செல்வங்களும் குபேர சம்பத்தும் வரமாக கிடைத்தது. அஷ்டதிக் பாலகர்களில் ஒருவரான குபேரரை, மகாலட்சுமியை வழிபாடு செய்யும்போது வணங்கலாம். ஆனால் நாளை முதல் வழிபாடு, முதல் முக்கியத்துவம், முன்னுரிமை அனைத்துமே மகாலட்சுமி தேவியை பிரதானமாக வைத்து தான் செய்ய வேண்டும். அதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

gupera

நன்றாக புரிந்து கொள்ளுங்கள். குபேரரை வழிபாடு செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. நாளை பிரதானமான வழிபாடு என்பதும் மகாலட்சுமிக்கு என்பதை மறந்து விடக்கூடாது. இறுதியாக வாசனை மிகுந்த தூபங்களை ஏற்றி வைத்துவிட்டு தீப தூப ஆராதனை காண்பித்து மஹாலக்ஷ்மி தாயாருக்கு முன்பு உட்கார்ந்து 5 நிமிடம் உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமியின் மந்திரங்களை சொல்லலாம்.

mahalakshmi

எந்த மந்திரமும் தெரியாது என்பவர்கள் ‘ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்தால் கூட போதுமானது. இறைவழிபாடு செய்து விட்டு, அதன் பின்பு பிரசாதத்தை எடுத்து உங்கள் வீட்டில் குடும்பத்தில் இருப்பவர்கள் சாப்பிடலாம்.

லட்சுமி தேவிக்கு முன்பு ஒரு மண்பானையை அட்சய பாத்திரமாக வைத்து இருக்கிறீர்கள் அல்லவா அது அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். அதன் உள்ளே இருக்கும் உப்பை மட்டும் மாதத்திற்கு ஒருநாள் மாற்றி வரவேண்டும். இந்த ஒரு அக்ஷய பாத்திரம் உங்கள் வீட்டில் அள்ள அள்ள குறையாத செல்வ வளங்களை கொடுத்துக்கொண்டே இருக்கும். இந்த மண் பாத்திரத்திற்கு உள்ளே வைத்த ரூபாய் நோட்டுகளை எடுத்து மங்களகரமான செலவிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். புதியதாக மீண்டும் ரூபாய் நோட்டுக்களை அதில் போட்டு வைக்கலாம் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

rava-payasam

நாளைய தினம் மகாலட்சுமியின் அருளைப் பெற மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி உங்களுடைய வீட்டிலும் லக்ஷ்மி குபேர பூஜையை செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -