இத மட்டும் செஞ்சு பாருங்க! மாத கடைசியில் கூட, கடன் வாங்கும் சூழ்நிலையே உங்களுக்கு வராது. அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும் அளவிற்கு உங்கள் கையில் பணம் எப்போதுமே தங்கும்.

cash1

லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும், ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும், 100 ரூபாய் கணக்கில் தினசரி கூலி வாங்குபவர்கள் ஆக இருந்தாலும், அவரவர் தகுதிக்கு ஏற்ப அவரவர்க்கு என்று கடன் பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கின்றது. என்ன செய்வது. காலத்தின் சூழ்நிலை! கையில் காசு இல்லை என்றாலும் கடன் வாங்கி செலவு செய்ய சொல்கிறது. கையில் காசு இல்லாத போது கடன் வாங்கி செலவு செய்யும் பழக்கத்தை குறைத்துக் கொண்டாலே, கடன் தொல்லையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். கையில் பணம் தங்கும்.

cash-question

எவ்வளவுதான் சம்பளம் வாங்கினாலும் மாத கடைசியில், அடுத்த மாதம் சம்பளம் வரும் வரை நம்மில் பல பேருக்கு திண்டாட்டம்தான். அந்தக் காலத்திலேயே பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள். 1ஆம் தேதியில் இருந்து 10ஆம் தேதி வரை கொண்டாட்டம். 10 லிருந்து 30 வரை திண்டாட்டம் என்று.

உங்களுக்கு பண கஷ்டம் வரக்கூடாது. கையில் பணம் எப்போதுமே இருக்க வேண்டும் என்றால், வருமானம் வந்த உடனேயே சிறு தொகையை சேமிப்பில் வைக்கவேண்டும். இதை முதலில் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவுக்காக கடன் வாங்காதீர்கள். அடுத்தபடியாக பரிகாரங்கள் என்று சொன்னால் பணத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை லவங்கம், பட்டைக்கு உண்டு. இது பல பேருக்கு தெரிந்திருக்கலாம்.

krambu

லவங்கம் பட்டை, இந்த இரண்டு பொருட்களை வைத்து உங்களுக்கு பணம் சேர்ப்பதில் எந்த பரிகாரங்கள் தெரிந்து இருந்தாலும் சரி, ஒரு முறை இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள். லவங்கம் பட்டை இந்த இரண்டு பொருட்களை கடையிலிருந்து புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள். 3 லவங்கம், 1 பட்டுத் துண்டு பரிகாரத்திற்காக எடுத்துக் கொள்ளுங்கள் போதும். அதை உங்கள் வீட்டு பூஜை அறைக்கு எடுத்து வாருங்கள்.

- Advertisement -

பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உள்ளங்கைகளில் லவங்கமும், பட்டையையும் எடுத்துக்கொண்டு உங்கள் தலையை ஒன்பது முறை சுற்றி அதன் பின்பு சிவப்பு நிற பட்டுத் துணியில் இந்த இரண்டு பொருட்களையும் வைத்து, சிவப்பு நிற நூலால் கட்டி, அந்த முடிச்சை பூஜை அறையில் வைத்து விட்டு, ‘ஓம் தன வசிய, சிவாய வசிய சுவாகா’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு இந்த முடிச்சுக்கு உருவேற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

pattai

நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் இந்த முடிவினை வைத்து விட வேண்டும். அசல் பட்டுத்துணியை பயன்படுத்துபவர்களுக்கு உடனடி பலன் கைமேல் கிடைக்கும். அமாவாசை தினத்தன்று, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி இந்த நாட்களில் இப்படிப்பட்ட தன வசிய பூஜையை உங்கள் வீட்டில் செய்யலாம்.

red-cloth1

இதேபோல் இன்னொரு முடிச்சை தயாரித்து எப்போதும் உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளலாம். சிறிய பவுச் மாதிரி தயார் செய்து கூட அழகாக உங்கள் பர்சில் அதை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். நிச்சயமாக கட்டாயமாக ஏதாவது ஒரு விதத்தில் கைக்கு பண வரவு வந்து கொண்டே இருக்கும். ஒரு ரூபாய் கூட இல்லாத சூழ்நிலை ஒரு நாளும் உங்களுக்கு ஏற்படாது. முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
வருமான தடை நீங்கி செல்வம் செழிக்க 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? நீங்களும் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.