- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதன வசியத்தை ஏற்படுத்தும் விஷ்ணுபதி புண்ணிய கால பரிகாரம்

தன வசியத்தை ஏற்படுத்தும் விஷ்ணுபதி புண்ணிய கால பரிகாரம்

- Advertisement -

தெய்வங்களிலேயே மிகவும் வசதியான பெருஞ்செல்வம் இருக்கக்கூடிய தெய்வமாக திகழக் கூடியவர் பெருமாள், மகாலட்சுமி மற்றும் குபேரர். இவர்கள் மூவரின் அருளால் தான் ஒருவருக்கு தன தானியம் என்பது உண்டாக்கும். அப்படிப்பட்ட பெருமாளுக்கு உரிய நாளாக தான் இன்றைய நாள் திகழ்கிறது. இன்று விஷ்ணுபதி புண்ணிய காலம், ஆவணியின் முதல் நாள், நவமி திதியோடு சேர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்வதோடு இந்த ஒரு பரிகாரத்தையும் சேர்த்து செய்யும் பொழுது தன வசியம் உண்டாகும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விஷ்ணுபதி புண்ணிய கால பரிகாரம்

ஒருவர் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அவர் சம்பாதித்த பணமோ தங்கமோ அவரிடம் நிரந்தரமாக தங்க வேண்டும் என்றால் அவருக்கு தனவசியம் மற்றும் பண வசியம் என்பது உண்டாக வேண்டும். இந்த வசியத்தை ஏற்படுத்துவதற்கு மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவுக்கு உரிய பொருட்களை வைத்து பரிகாரம் செய்யும் வழக்கத்தை நாம் வைத்திருப்போம். அப்படி செய்யக்கூடிய பரிகாரம் நல்ல பலனை தர வேண்டும் என்றால் இது போன்ற விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் செய்ய வேண்டும். இன்று ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தரித்திரமும் நீங்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள்தான் தேவைப்படுகிறது. அதில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் ஏலக்காய். இது வசிய தன்மை மிக்க ஒன்றாக கருதப்படுகிறது. ஏலக்காயை எந்த இடத்தில் வைக்கிறோமோ அதனுடன் சேர்ந்து இருக்கக் கூடிய பொருள் பல மடங்கு பெருகும் என்றும் கூறிய நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஏலக்காயையும் ஒரே ஒரு ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப்போகிறோம்.

இந்த பரிகாரத்தை இன்று இரவுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் செய்வது நல்லது. அசைவம் சாப்பிட்டிருப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது, அதே போல் தீட்டு சம்பந்தமாக இருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. சுத்தமாக குளித்து முடித்துவிட்டு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பெருமாளுக்கு துளசி இலைகளை சாற்றிக் கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையில் ஐந்து நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஏலக்காய் மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து நன்றாக மூடி உங்களுடைய இதயத்தில் வைத்துக்கொண்டு பெருமாளிடம் மனதார வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது பணம் தொடர்பான நேர்மறையான வேண்டுதல்களை முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்துவிட்டு ஒரு மூடி போட்ட ஏதாவது ஒரு டப்பாவை எடுத்து அதற்குள் இந்த ஏலக்காய் மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு இதனுடன் சிறிது பச்சை கற்பூரத்தையும் சேர்த்து மூடி போட்டு மூடி விட வேண்டும்.

இந்த டப்பாவை பெருமாளின் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். பிறகு கற்பூர தீப தூவ ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த ஏலக்காயை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏகாதேசி திதியிலோ அல்லது சனிக்கிழமையிலோ எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக வேறு ஏலக்காயை மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க சஷ்டி வழிபாடு

எளிமையான பரிகாரமாக இருந்தாலும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் நாம் செய்யும் பொழுது இந்த பரிகாரத்திற்குரிய பலன் பல மடங்கு நமக்கு கிடைக்கும். முழு நம்பிக்கையோடு பெருமாளை நினைத்து இந்த பரிகாரத்தை செய்து தன வசியத்துடன் வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்