- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்தது நடக்க சஷ்டி வழிபாடு

நினைத்தது நடக்க சஷ்டி வழிபாடு

- Advertisement -

முருகப்பெருமானுக்கு உரிய நாட்கள் என்று பல இருக்கின்றன. முருகப்பெருமானுக்குரிய கிழமை, முருகப்பெருமானுக்குரிய திதி, முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரங்கள் என்று. அவை அனைத்திற்கும் விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் இருக்கும். அதிலும் முக்கியமாக திதி வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட திதி வழிபாடாக தான் சஷ்டி திதி வழிபாடு திகழ்கிறது. சஷ்டி திதி வரக்கூடிய நாளில் நாம் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட்டால் நாம் நினைத்தது நடக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நினைத்தது நடக்க சஷ்டி வழிபாடு

எந்த ஒரு காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தால் நமக்கு ஏதாவது ஒரு நன்மை நடைபெறும் அல்லவா? பொதுவாக பலரும் பணத்தை சம்பாதிப்பதற்காக பல காரியங்களில் ஈடுபடுவார்கள். பணம் பொருள் என்று எதையாவது ஒன்றை சேர்க்க வேண்டும் என்பதற்காக செய்யக்கூடிய காரியங்களில் உள்ள தடைகளை நீக்கி வெற்றிகளை தருவதற்குரிய அற்புதமான ஒரு வழிப்பாடாக தான் இந்த வளர்பிறை சஷ்டி வழிபாடு திகழ்கிறது. வளர்பிறை சஷ்டியில் நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பொன்னும் பொருளும் பணமும் சேர்ந்து கொண்டே இருக்கும் என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

சஷ்டி திதி வரக்கூடிய அன்றைய தினத்தில் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு விரதம் இருக்க இயன்றவர்கள் அன்று முழுவதும் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். ஒருவேளை உடல் சூழ்நிலை காரணமாக விரதம் இருக்க இயலாதவர்கள் அரிசி உணவை தவிர்த்து விட்டு பழ வகைகள் அல்லது கோதுமை, கம்பு, ராகி போன்ற சிறுதானியங்களை பயன்படுத்தி உணவு உட்கொள்ளலாம். மாலை 6 மணிக்கு முருகப்பெருமானை நினைத்து நாம் வழிபாடு செய்ய வேண்டும்.

வீட்டில் வேல் இருக்கும் பட்சத்தில் அந்த வேலிற்க்கு அபிஷேகம் செய்ய வேண்டும். வேல் இல்லை முருகனின் சிலை தான் இருக்கிறது என்றால் முருகனின் சிலைக்கும் அபிஷேகம் செய்யலாம். முருகனின் சிலையும் இல்லை வேலுமில்லை என்பவர்கள் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக பச்சரிசி மாவினால் வேல் கோலம் போட்டு வழிபாடு செய்யலாம். முருகனின் சிலை வேல் வைத்திருப்பவர்கள் பின்வரும் அபிஷேகங்களை கண்டிப்பான முறையில் செய்ய வேண்டும். முதலில் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பிறகு பன்னீர், விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றை வைத்து அபிஷேகம் செய்துவிட்டு தண்ணீரை வைத்து சுத்தம் செய்து பிறகு நம் கை பட பஞ்சாமிர்தத்தை தயார் செய்து அந்த பஞ்சாமிர்தத்தை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

- Advertisement -

அபிஷேகம் செய்த பிறகு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தத்தை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். சிலை வேல் இல்லாதவர்கள் பஞ்சாமிருதத்தை தயார் செய்து அதை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு வாசனை மிகுந்த மலர்களை கையில் வைத்துக்கொண்டு “ஓம் ரஹண பவச” என்னும் மந்திரத்தை 106 முறை கூறி முருகப்பெருமானின் வேல், சிலை அல்லது படத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிட்டு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக உண்ண வேண்டும். இந்த முறையில் யார் ஒருவர் வளர்பிறை சஷ்டி நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு பொன்னும் பொருளும் சேரும் வாழ்வில் எந்த வித குறையும் இருக்காது.

இதையும் படிக்கலாமே: மாதக் கடைசி நாள் செய்யக்கூடாத காரியங்கள்

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உரிய திதியான சஷ்டி திதி அன்று முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்