நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களிலும், ஒவ்வொரு தெய்வங்கள் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. இப்படிப்பட்ட முக்கியமான சில பொருட்களை பிறருக்கு தானமாக கொடுப்பதன் மூலம் நமக்கு அது சாபமாக வரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்த வகையில் எந்தெந்த பொருட்களை தானம் செய்யக்கூடாது என்ற சாஸ்திரங்கள் கூறுகிறது? எனும் தகவல்களை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.
அந்த காலம் முதல் இந்த காலம் வரை முக்கியமான சில வெள்ளை நிற பொருட்களை மாலை அந்தி சாய்ந்த பிறகு யாருக்கும் தானம் செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூற நாம் கேட்டிருப்போம். குறிப்பாக உப்பு, பால், தயிர் போன்ற வெள்ளை நிற பொருட்களை மாலை நேரத்திற்கு பிறகு யாருக்கும் தானம் செய்யக்கூடாது என்பதை சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
அதே போல வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களையும், யாருக்கும் தானம் செய்யக்கூடாது. எவ்வளவுதான் நமக்கு இரக்க குணமாக இருந்தாலும், நாம் சமையல் செய்ய பயன்படுத்தும் அன்னபூரணி வாசம் செய்யக்கூடிய முக்கியமான பொருட்களை கேட்டாலும் கடன் கொடுக்கக் கூடாது. வட இந்திய மக்கள் அதிகம் சப்பாத்தி செய்வது தான் அவர்களுடைய பாரம்பரியம். இத்தகையவர்கள் சப்பாத்தி கட்டை மற்றும் அதை வைக்க பயன்படுத்தும் தட்டு போன்றவற்றை யாருக்கும் தானம் கொடுக்க மாட்டார்கள்.
அதே போல தென்னிந்திய மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரிசி பானை, சாதம் வைக்கும் கரண்டி, தட்டு, அரிசி அளக்கும் அளவை போன்றவற்றை யாருக்கும் கடன் கொடுக்க கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பொருட்களில் எல்லாம் மகாலட்சுமி மற்றும் அன்னபூரணி வாசம் செய்கிறார்கள். இவர்களை நீங்கள் கடன் கொடுத்து விட்டால், உங்கள் வீட்டில் இருக்கும் செல்வ வளம் அவர்களுக்கு சென்று விடும், இதனால் உங்களுக்கு வறுமை ஏற்படும். தெரியாமல் கூட இந்த பொருட்களை யாருக்கும் கடனாக கொடுக்காதீர்கள்.
வெள்ளிக்கிழமையில் பாலை தானம் கொடுப்பது, சனிக்கிழமையில் எண்ணெயை தானம் கொடுப்பது, வியாழன் கிழமையில் ஊறுகாயை தானம் கொடுப்பது போன்ற செயல்களை மறந்தும் செய்யாதீர்கள். திருமணமான ஒரு பெண் தான் அணிந்திருக்கும் அல்லது தான் வைத்திருக்கும் எந்த ஒரு தங்க நகைகளையும் மற்றவர்களுக்கு கடனாக கொடுக்கக் கூடாது. தங்க நகைகளில் மகாலட்சுமி பரிபூரணமாக வாசம் செய்யும் இடமாக இருக்கிறது. அதனால் நீங்கள் மற்றவர்களுக்கு தானமாகவோ அல்லது கடனாகவோ கொடுத்தால் உங்களிடம் இருக்கும் லட்சுமி அருள், செல்வம் ஆனது அவர்களுக்கு சென்று விடும், இதனால் உங்களுக்கு வறுமை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
இதையும் படிக்கலாமே:
தை மாத ஞாயிற்றுக்கிழமை அம்பாள் வழிபாடு
வீட்டை தூய்மை செய்ய பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். தூய்மை என்பது மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம், இதனால் வீட்டை தூய்மை செய்ய பயன்படுத்தும் துடைப்பம், முறம், மாப் போன்றவற்றை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதனை அழுக்குடன் வைத்திருப்பவர்கள் இல்லத்தில், கண்டிப்பாக பணம் என்பது சேரவே செய்யாது. நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும், உழைப்பில் உங்களுக்கு முன்னேற்றமும் இருக்காது, எனவே துடைப்பம், முறத்தை முறையாக தூய்மைப்படுத்துங்கள். முடி, தூசு, அழுக்கு போன்றவற்றை அதிலிருந்து அகற்றி சுத்தமாக்கி, யாருடைய கண்களுக்கும் தெரியாதபடி மறைத்து வையுங்கள். வீட்டிற்கு வருபவர்கள் இவற்றை பார்க்கக்கூடாது. இவற்றை எல்லாம் தானம் கொடுத்தால் நிச்சயம் குடும்பத்தில் பிரச்சனைகளும், வறுமையும் ஏற்படும்.