- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதை மாத ஞாயிற்றுக்கிழமை அம்பாள் வழிபாடு

தை மாத ஞாயிற்றுக்கிழமை அம்பாள் வழிபாடு

- Advertisement -

ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை அம்பாளுக்கு எந்த அளவுக்கு உகந்ததோ, அதேபோல தான், தை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் அம்பாள் வழிபாட்டிற்கு மிக மிக உகந்தது. உங்களுடைய வீட்டில் கெட்ட சக்தி, கண்திருஷ்டி தங்கி இருப்பதால், தேவையில்லாத பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது, வீட்டில் நிம்மதியே இல்லை என்றால், தை மாதம் ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

நிச்சயமாக குடும்பத்தில் இருக்கும் துன்பங்கள் கஷ்டங்கள், கண் திருஷ்டி, ஏவல் பில்லி சூனியம் போன்ற கெட்ட சக்திகளிடமிருந்து நல்லதொரு விமோசனம் கிடைக்கும். பிரச்சனைகள் உங்கள் வீட்டில் இருந்து தானாக வெளியேறும்.

- Advertisement -

தை ஞாயிறு அம்மன் வழிபாடு

தை மாதம் ஞாயிற்றுக்கிழமை வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கு செல்ல வேண்டும். அம்பாள் கோவிலுக்கு செல்லும்போது 4 எலுமிச்சம் பழங்கள் வாங்கிச் செல்ல வேண்டும். அம்பாளுக்கு அர்ச்சனை செய்ய வெற்றிலை, பாக்கு, பூ, பழம் கொஞ்சம் வேப்பிலைகளை எடுத்துச் செல்லுங்கள். அம்பாள் சன்னிதானத்திற்கு முன்பாக விளக்கு போட்டு விடுங்கள். மூன்று எலுமிச்சம் பழங்களை முதலில் கையில் எடுத்துக் கொள்ளவும்.

ஒவ்வொரு எலுமிச்சம் பழமாக கையில் எடுத்து மூன்று முறை தலையை சுற்றி, அம்பாள் சூலத்தில் குத்தி விடுங்கள். பிறகு அம்பாளிடம் உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களது அத்தனை பெயர்களையும் சொல்ல வேண்டும். உங்கள் கோத்திரம், உங்களுடைய ராசி, நட்சத்திரம் சொல்லி அர்ச்சனையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அர்ச்சனைக்கு கொடுக்கும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை அம்பாள் பாதத்தில் வைத்து எடுத்து தரச் சொல்லி குருக்களிடம் சொல்லி விடுங்கள்.

- Advertisement -

அர்ச்சனை தட்டோடு அந்த ஒரு எலுமிச்சம் பழத்தையும், மீண்டும்  வாங்கி நேராக உங்கள் வீட்டிற்கு வரவேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் குலதெய்வத்தை மனதார நினைத்து, இந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி, இரண்டு பக்கமும் குங்குமம் தடவி, நிலை வாசல் படியில் இரண்டு பக்கமும் வைத்து விடுங்கள். தை மாதம் ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது மாலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

அம்மனுக்கு அர்ச்சனை செய்ய கொஞ்சம் வேப்பிலை எடுத்துச் சென்றீர்கள் அல்லவா, அதையும் கோவிலில் இருந்து கேட்டு திரும்பவும் கொஞ்சமாக வாங்கி வாருங்கள். அந்த வேப்பிலைகளை நிலை வாசல் படியில் சொருகி வையுங்கள். இவ்வளவுதான் பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: தை மாத தேய்பிறை பஞ்சமி திதி பரிகாரம்

நாளைய தினம் வரவிருக்கும் தை ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி, அல்லது இனி வரக்கூடிய தை ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி, அம்பாளின் பரிபூரண ஆசி உங்கள் குடும்பத்திற்கு கிடைத்துவிடும் உங்களை தொடரும் கஷ்டங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்