வாழும் பொழுதே இந்த தானங்களை செய்து இருக்கின்றீர்களா பாத்துக்கோங்க? அப்டின்னா போற வழியெல்லாம் உங்களுக்கு பிரச்சனையே இல்ல கவலைய விடுங்க!

garuda-puranam

மனிதனால் வாழும் பொழுதே செய்யப்படும் தானங்களால் கிடைக்கக் கூடிய பலன்கள் என்ன? என்பதை மகாவிஷ்ணு கருடரிடம் கூறியது கருட புராணத்தில் இடம் பெற்றுள்ளது. இந்துக்கள் உடைய மரண சாங்கியத்தில் வேத பண்டிதர்கள் சில தானங்களைச் செய்ய சொல்வார்கள். அதில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்து கொண்டிருக்கும். அதை நாம் ஏன்? எதற்கு? என்று தெரிந்து கொள்ளாமலேயே செய்து கொண்டிருக்கிறோம். கட்டாயம் இனி அதை தெரிந்து கொண்டு செய்வது நல்லது.

eman

ஒருவர் மரணித்த பிறகு மேலோகம் செல்லும் பொழுது நேரடியாக யாரும் எமலோகம் செல்ல முடியாது. ஈர் ஏழு 14 லோகங்களையும் கடந்து சென்று தான் யம லோகத்தை அடைய முடியும். வாயு லோகம், அக்னி லோகம், வருண லோகம், குபேர லோகம் என்று வரிசையாக இது போன்ற ஒவ்வொரு லோகத்தையும் கடக்கும் பொழுது அவரவர் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிப்பதாக கூறப்படுகிறது.

பாவம் செய்தவர்களுக்கு கரடு முரடான பாதைகளையும், அதைத் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு ஆத்ம பலவீனத்தையும் கொடுப்பார்கள். புண்ணியம் செய்தவர்களுக்கு அதே பாதையை கொடுத்தாலும், அதை தாங்கிக் கொள்ளும் ஆத்ம பலத்தை கொடுப்பார்களாம். அந்த நேரத்தில் நாம் துன்பப்படாமல் செல்வதற்கு தான் கீழ் லோகத்தில் வாழும் பொழுது புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

garuda-bagavan1

கருட புராணத்தின் படி ஒவ்வொரு தானதிற்கும், ஒவ்வொரு விதமான பலன்களை கூறியுள்ளனர். அதாவது நீங்கள் வருண லோகத்தில் கடும் சூறைக் காற்றை கடந்து செல்வதற்கு பூமியில் வாழும் பொழுது குடை தானத்தை செய்திருக்க வேண்டும். கடும் குளிர் காற்றை தாங்கிக் கொள்ள சாலையோர மக்களுக்கு பாய், தலைகாணி, கம்பளி, போர்வை போன்ற பொருட்களை தானம் செய்து இருக்க வேண்டும்.

- Advertisement -

உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி இன்று பேசிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் பல யுகங்களுக்கு முன்பே கருட புராணத்தில் இது பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளது வியப்பிற்கு உரியதாக இருக்கின்றது. அக்னி லோகத்தில் செல்லும் பொழுது கடும் அனலை தாங்கிக் கொள்வதற்கு உயிருடன் இருக்கும் பொழுதோ அல்லது இறந்த பின்போ ரத்தம் அல்லது உடல் உறுப்புகளை தானம் செய்திருக்க வேண்டும். மனிதன் வாழ்நாளில் ரத்த தானத்தை எவ்வளவுக்கு எவ்வளவு செய்கிறானோ அவ்வளவுக்கு புண்ணியம் சேரும்.

blood donation

மனிதன் இறக்கும் பொழுது அவனுடைய பேரன், பேத்திகள் நெய் பந்தம் ஏற்றுவது இறந்த ஆத்மா இருட்டில் செல்லும் பொழுது வெளிச்சம் பெறுவதற்கு தான். குறிப்பிட்ட தூரம் வரை அந்த வெளிச்சம் அவனுடன் பயணிக்கும். அதன் பிறகு மீண்டும் இருள் சூழும். அந்த இருளில் இருந்து வெளிச்சம் பெறுவதற்கு வாழும் பொழுதே விளக்கு தானம் செய்ய வேண்டும். புது விளக்கு ஒன்றை எரியும் ஜோதியுடன் தானம் செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பொழுது தான் மீதி பாதை வெளிச்சத்துடன் இருக்குமாம்.

marraige-couple

பெண் பிள்ளையை போற்றி வளர்த்து நல்ல ஆடவனுக்கு கன்னிகா தானம் செய்பவர்களுக்கு இறுதிக் காலத்தில் முக்தி கிட்டுமாம். இதனால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் நிச்சயம் யோகக்காரர்கள் தான். பூமியில் நீர் நிலைகளை உருவாக்குபவர்கள், அன்ன தானம் செய்பவர்கள், கோ தானம் செய்பவர்கள், அனாதை பிணங்களுக்கு ஈம காரியங்கள் செய்வது, மரங்களை நடுவது மட்டுமல்லாமல், அதனை பயனுறும் வகையில் வளர்த்து ஆளாக்குவது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு செல்லும் வழியெல்லாம் சுகம் தானாம்.

after-death

ஆகவே வாழும் பொழுதே, நாம் நன்றாக இருக்கும் பொழுதே, நம்மால் முடிந்த அளவிற்கு நாம் பிறந்த இந்த உலகத்திற்கும், மனிதர்களுக்கும் தானங்கள் செய்து, தாய், தந்தை மற்றும் நம் முன்னோர்கள் இறந்த பிறகு பிராமணர்கள் சொல்லும் அத்தனை தானங்களையும் சரியாக செய்து கொடுத்து, இறந்தவர்களை வழி அனுப்பி வைத்தால் உங்களுக்கு எமலோகத்தில் நிம்மதியான பயணம் அமையும்.