இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட யாருக்கும் தானம் செய்து விடாதீர்கள்! பெரும் பாவம் வந்து சேரும்.

salagramam-vishnu

குறிப்பிட்ட இந்த பொருட்களை மட்டும் தானம் செய்வதால் நாம் தேவையில்லாத பாவங்களுக்கு ஆளாக நேரிடும் என்று ஆன்மீக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எப்பொழுதும் தானம் என்பதே மிகப்பெரிய புண்ணியம் என்று தான் அர்த்தம். ஒருவருக்கு நாம் எதை தானம் செய்தாலும், அது நமக்கு புண்ணியமாக வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது எதற்காக இந்த பொருட்களை மட்டும் தானம் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது? அப்படி அது என்ன பொருள்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

thanam

தானத்தை விட, நாம் தானம் செய்யும் பொருட்களை யாருக்கு கொடுக்கிறோம்? என்பது தான் மிகவும் முக்கியமானது. தவறான நபர்களிடம் போய் சேரும் தானமானது பாவத்தை கூட கொண்டு வந்து சேர்த்து விடும். ஆகவே தானத்தை கூட நாம் பார்த்து தான் செய்ய வேண்டும். இதைத் தான் நம் முன்னோர்கள் பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்று கூறுவார்கள்.

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம், ரத்ததானம் என்று அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப பிரித்துக் கொள்வது உண்டு. ஆனால் தானம் செய்பவர்கள் சிறந்த ஆன்மீக வாதியாக, இறை பக்தராக அனைவராலும் அறியப்படுகிறார். நாம் ஒருவருக்கு செய்யும் அன்னதானம் உண்மையிலேயே வழி இல்லாத ஒரு ஏழையின் பசியை போக்கினால் உங்களுடைய அடுத்தடுத்த சந்ததிகளையும் சேர்த்து நாலு தலைமுறை வரை அதற்கான புண்ணியத்தை அனுபவிப்பதாக ஜோதிடங்கள் கூறுகிறது.

pichai-thanam

உண்மையிலேயே தானத்திற்கு அத்தகைய சக்திகள் உண்டு. அதனால் தான் பெற்றோர்கள் செய்யும் பாவமானது பிள்ளைகளை சேரும் என்று கூறப்படுகிறது. பெற்றோர்கள் செய்த புண்ணியமும் அப்படியே பிள்ளைகளை வந்து சேர்ந்தடையும் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று தான்.

- Advertisement -

அந்த வகையில் இந்த தானத்தை நாம் கட்டாயம் இவர்களுக்கு செய்யக்கூடாது! அதனை தெரிந்து கொள்ளுங்கள்! பொதுவாக எந்த தானத்தை வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் வீட்டில் நாம் பாரம்பரியமாக அல்லது வழிவழியாக பயன்படுத்தி வரும் ஆன்மீக பொருட்களை அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்கும் பொழுது சற்று யோசிக்க வேண்டும். உங்களுடைய வீட்டில் ருத்ராட்சம், சாலகிராமம், மகா சங்கு, ஸ்படிகம், மரகதம், தாமரை மணி, கோமதி சக்கரம் போன்ற பொருட்களை வைத்து இருப்பவர்கள் அதற்கு முறையான பூஜைகளும் செய்து வருகிறீர்கள்.

ஆனால் நீங்கள் வாழும் காலத்திலேயே அதற்கு அடுத்து யார் பூஜை செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டும். அவர்கள் உங்களைப் போலவே பக்தியுடனும், சிரத்தையுடனும் அதனை போற்றி பாதுகாத்து வந்தால் நிச்சயம் அடுத்தடுத்து சந்ததிகளுக்கு அந்த அதிர்ஷ்டம் வந்து சேரும். ஆனால் தெரியாமல் கூட முறையாக வழிபாடு செய்யாதவர்களிடம் நீங்கள் கொடுத்து விட்டால் அதுவே பெரும் பாவமாக வந்து சேர ஆரம்பித்துவிடும். ஒரு சிலருக்கு சாளகிராமகல் எவ்வளவு மகிமை ஆனது என்பதே தெரியாது. சாளக்கிராமம் என்பது விஷ்ணு பகவானுக்கு உரிய கற்களாக பார்க்கப்படுகிறது.

rudratcham-thiyanam

அது போலவே ருத்ராட்சத்தில் சிவபெருமானும் குடி இருப்பதாக புராணங்கள் குறிப்பிட்டுள்ளது. ஆக இது போன்ற தெய்வீகமான பொருட்களை முறையாக வழிபடாதவர்களுக்கு தானம் செய்யக்கூடாது. அப்படி நீங்கள் செய்து, அவர்கள் சரியாக வழிபடாமல் சென்று விட்டால் அந்த பாவம் உங்களை வந்து சேரும். இதனால் தான் இந்த பொருட்களை எல்லாம் மற்றவர்களுக்கு தானம் செய்யும் போது நிச்சயமாக யோசிக்க வேண்டும். நீங்கள் இதனை கொடுக்கும் நபர்கள் அதனை சரியாக பார்த்துக் கொள்ளும் பட்சத்தில் உங்கள் நல்ல அதிர்ஷ்டங்கள் வரும் என்பதும் நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே
நீங்கள் நினைக்கும் காரியம் உடனே வெற்றி அடைய, வெளியில் செல்லும் பொழுது இந்த 3 நிறத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.