நீங்கள் நினைக்கும் காரியம் உடனே வெற்றி அடைய, வெளியில் செல்லும் பொழுது இந்த 3 நிறத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள்!

murugan-sani-bagavan

ஒவ்வொருவருடைய மனதிலும் ஆயிரமாயிரம் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் எப்போதும் இருக்கும். அது அவ்வப்போது மாறிக் கொண்டே கூட இருக்கும். நாம் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் பொழுதும், நிச்சயமாக ஏதாவது ஒரு விஷயம் நடைபெற வேண்டும் அல்லது இன்றைய நாள் நல்லபடியாக அமைய வேண்டும் என்கிற சிந்தனையோடு தான் வெளியே செல்வோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சில நாட்களில் அப்படி வெளியே கிளம்பும் பொழுது இன்று நாம் செல்லும் காரியம் வெற்றியாக வேண்டும் என்கிற கனவுகளோடு செல்வோம்.

praying-god

அந்த சில நாட்களில் மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடையின் நிறம் மற்றும் பயன்படுத்தும் பொருட்களின் நிறத்தை கவனியுங்கள். காரிய வெற்றிக்கு இந்த நிறங்களை தவிர்ப்பது உத்தமம் என்று ஆன்மீக சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன. அப்படியான நிறங்களை பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

நீங்கள் நல்ல விஷயத்திற்காக வெளியே சென்றாலும் சரி அல்லது ஏதாவது ஒரு சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு வெளியில் சென்றாலும் சரி, செல்லும் காரியம் நல்ல படியாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அல்லது ஒரு சிலருக்கு அதுவே லட்சியமாக கூட இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் வெளியே கிளம்பும் பொழுது, உங்களுடைய சட்டைப்பையில் எப்பொழுதும் ரூபாய் நோட்டு வைத்திருக்க வேண்டும்.

money

நீங்கள் மணிபர்ஸ், வாலெட், ஹேண்ட் பேக் என்று எதை வைத்து இருந்தாலும் சரி, உங்களுடைய சட்டை பாக்கெட்டில் கட்டாயமாக காசு இல்லாமல் எந்த ஒரு காரியத்திற்கும் வெளியே செல்லக் கூடாது. சட்டைப் பையில் எப்போதும் பணத்தை வைத்திருப்பது அவசியம். பணம் இருக்கும் இடத்தில் தான் மீண்டும் மீண்டும் பணம் சேரும் என்பது ஜோதிட நம்பிக்கை.

- Advertisement -

அது போல் உடையிலும் செல்லும் காரியம் வெற்றி அடைய அடர் நிறங்களைத் தவிர்த்து இளம் நிறங்களை தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. நீங்கள் அப்போது அணிந்து கொண்டிருக்கும் நிறத்தில் கூட பலன்கள் உள்ளது. இதைத் தான் ஜோதிடத்தில் அதிர்ஷ்டமான நிறம் என்று அன்றைய நாளின் அதிர்ஷ்ட நிறத்தை கூறுகிறார்கள்.

shirt-pocket

என்னதான் அதிர்ஷ்டம் இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்திற்காக வெற்றிக்கான முயற்சியில் வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் பொழுது, அதுவும் பண வரவை எதிர்நோக்கி வெளியில் கிளம்பும் பொழுது இதை செய்து விட மறந்துவிடாதீர்கள். நீங்கள் உடுத்தும் உடை மற்றும் வைத்திருக்கும் பொருட்களுக்கு அடர் நிறத்தை தவிருங்கள். மேலும் சட்டைப் பையில் பணத்தை வைத்துக் கொண்டு செல்லுங்கள். பணவரவை குறைக்கக் கூடிய ஆற்றல் கருப்பு, சிகப்பு மற்றும் நீல நிறத்திற்கு உண்டு. இவைகள் எந்த கிரகத்தினுடைய வெளிப்பாடாக இருந்தாலும் காரிய வெற்றிக்கு உகந்தவை அல்ல. கருப்பு, சிகப்பு, நீலம் போன்ற நிறத்தில் இருக்கும் உடைகள் மற்றும் பொருட்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.

yellow-handkerchief

நீங்கள் அணிந்திருக்கும் உடையானது இளம் நிறத்திலும், மஞ்சள், பச்சை போன்ற அதிர்ஷ்ட நிறங்கள் அணிந்து கொண்டு வெளியில் கிளம்பும் பொழுது செல்லும் காரியம் நிச்சயமாக வெற்றி அடையும் என்கிறது ஜோதிடம். கருப்பு, நீலம் என்பது சனி பகவானுக்கு உரிய நிறமாக கருதப்படுகிறது. மேலும் அடர் சிவப்பு நிறம் என்பது தோல்விக்கான அடையாளமாகவும் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மூன்று நிறங்களைத் தவிர்த்து நீங்கள் மற்ற நிறங்களை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு வெளியில் சென்றால் வெற்றி நிச்சயம் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதையும் படிக்கலாமே
நம்மிடம் இருக்கும் பணம் 1 ரூபாய் கூட வீண்விரயம் ஆகவே ஆகாது. அஷ்டமி அன்று பைரவரை இப்படி வழிபாடு செய்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.