தனுசு ராசிக்காரர்களின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கூடிய வெற்றிலை பரிகாரம்! வியாழன் கிழமையில் இதை செய்ய உங்கள் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும்.

guru-thanusu-vetrilai
- Advertisement -

12 ராசிகளில் தனுசு ராசியும் ஒன்றாக இருக்கின்றது. தனுசு ராசிக்காரர்கள் 12 ராசிகளில் வித்தியாசப்பட காரணம் என்ன தெரியுமா? தனுசு ராசிக்காரர்களின் சுய ஜாதகம் மட்டுமல்லாமல் அவர்களுடைய ராசியின் படியும் ஆரம்ப கட்ட வாழ்க்கை என்பது மிகவும் கவலைப்படக் கூடியதாக இருந்து இருக்கும். எப்படிப்பட்ட ஜாதகர்களாக இருந்தாலும் தனுசு ராசியில் பிறந்தால் வாழ்க்கையின் முதல் பாதி கஷ்டத்தை தான் அனுபவிக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. தனுசு ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம் செய்தால் அவர்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும் என்பது நியதி. அதை அவர்கள் எப்படி செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

thanusu-rasi

ஒவ்வொரு தனுசு ராசியினரில் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய வாழ்வின் முதல் பாதி என்பது மிகவும் வருத்தம் அளிக்கும் வகையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள். வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கலாம், ஆனால் கஷ்டமே வாழ்க்கையாக இருக்கும் ராசி தனுசு ராசியே ஆகும். இந்த ராசியினர் எவ்வளவு தான் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து சென்றாலும் இறுதியில் கிடைப்பது என்னவோ அவமானமாக இருக்கும்.

- Advertisement -

உங்கள் ராசிக்கு நீங்கள் வியாழன் கிழமையில் இந்த பரிகாரத்தை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும். வியாழன் கிழமை என்பது குரு பகவானுக்கு உரிய கிழமையாகும். குருவின் அருள் பெற தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானுடைய வியாழன் கிழமை அன்று குரு ஓரையில், இந்த வெற்றிலை பரிகாரத்தை செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பாக வரும் குரு ஹோரை அதாவது 6 மணியில் இருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்வது உத்தமம்.

guru-bagavan

எப்பொழுதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது என்பது நம் கஷ்டங்களை போக்க கூடிய ஒரு நல்ல நேரமாக இருக்கும் ஆனால் அப்படி இப்பொழுது எல்லாம் யாரும் எழுவது கிடையாது. சரி பிரம்ம முகூர்த்த நேரத்தில் தினமும் எழ முடியாவிட்டாலும் இந்த பரிகாரத்தை செய்யும் நாளன்று சற்று சிரமம் பார்க்காமல் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராடி சூரியனை நோக்கி வழிபட வேண்டும். ஒரு சுத்தமான வெற்றிலையை கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கற்கண்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கற்கண்டு எந்த வடிவத்திலும் இருக்கலாம். இந்த கற்கண்டு தான் தேவை என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அதனை அப்படியே மடித்து கையில் வைத்துக் கொண்டு குரு ஹோரையில் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்து பின் கையில் இருக்கும் வெற்றிலையை அப்படியே மென்று சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடிக்கும் வரை சூரியனுடைய ஒளியில் அப்படியே நின்று கொண்டிருங்கள்.

vetrilai-kodi

பின்பு பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி மனதாரப் பிரார்த்தித்து கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் எப்பொழுதும் போல உங்கள் அன்றாட பணிகளை துவங்கலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் செய்து வர தனுசு ராசிக்காரர்கள் உடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் குருவின் அருளால் படிப்படியாக நீங்கி சுபீட்சம் உண்டாகும்.

- Advertisement -