அதிவிரைவாக 5000 ரன்களை ஒருநாள் போட்டியில் அடித்து புதிய சாதனை படைத்த – இந்திய வீரர்

shikhar
- Advertisement -

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அணி குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

sami

அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி துவக்கம் முதலே சரிவை சந்தித்தது. துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டும் 64 ரன்களை அடித்து ஆறுதல் அளித்தார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக நடையை கட்ட நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் இழந்தது.

- Advertisement -

பிறகு 158 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் தவான் களமிறங்கினர். இந்த ஆட்டத்தில் தவான் 10 ரன்களை அடித்தபோது ஒருநாள் போட்டியில் 5000 ரன்களை அடித்தார். இதன்மூலம் 119 போட்டிகளில் பங்கேற்றுள்ள தவான் அதிவிரைவாக 5000 ரன்கள் அடித்த இந்திய துவக்க வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

dhawan

ஆனால், ஒட்டுமொத்தமாக 5000 ரன்களை விரைவாக அடித்த இந்திய வீரர் என்ற சாதனை கோலியின் வசம் உள்ளது. கோலி 114 போட்டிகளில் 5000 ரன்களை அடித்து சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனால் 5000ரன்களை வேகமாக அடித்த இரண்டாவது இந்திய வீரர் மற்றும் துவக்க வீரராக தவான் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

56 ஒருநாள் போட்டிகள் 100 விக்கெட்டுகள் அதிவிரைவாக 100 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்த – இந்திய வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -