56 ஒருநாள் போட்டிகள் 100 விக்கெட்டுகள் அதிவிரைவாக 100 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்த – இந்திய வீரர்

sami
- Advertisement -

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

indian-team

ஆனால், இந்த ஜோடி சிறப்பான துவக்கத்திற்கு அடித்தளம் அமைக்கவில்லை. இந்திய அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இருவரையும் க்ளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். இருவரையும் முறையே 5,8 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

இந்த போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி ஓவரின் கடைசி பந்தில் குப்திலை க்ளீன் போல்ட் செய்தார். இந்த விக்கெட் ஒருநாள் போட்டிகளில் அவருடைய 100 ஆவது விக்கெட் ஆகும். இதன்மூலம் விரைவாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை இந்த போட்டியின் மூலம் பெற்றார்.

shami

மொத்தம் 6 ஓவர்கள் பந்து வீசிய ஷமி 2 மெய்டன் ஓவர்களுடன் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நியூசிலாந்து அணி 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் இந்திய அணி 158 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிவருகிறது. தற்போது வரை 4 ஓவர்கள் முடிவில் 11 ரன்கள் அடித்துள்ளது .

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

நியூசிலாந்தை சுருட்டி போட்ட இந்தியஅணி பந்துவீச்சாளர்கள். 200ரன்களை கூட அடிக்கமுடியாமல் நியூசிலாந்து ஆல்அவுட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -