புல்வாமா தாக்குதல் : பெரிய அளவில் நிதியுதவி அளிக்க உள்ள ஷிகார் தவான். ப்ளீஸ் நீங்களும் தரலாமே மனிதாபிமான வேண்டுகோள் விடுத்த தவான் – வீடியோ

Dhawan

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.

pulwama

நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் பெரிய அளவில் நிதியுதவி அளிக்க உள்ளார். அதன் வேளைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

அதன் முதற்கட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ பதிவினை இட்டுள்ளார். அதில் பாதிக்கப்பட்ட குடும்பம் குறித்து உருக்கமான பதிவினை பேசியுள்ளார். இதோ அந்த ட்விட்டர் பதிவு :

புல்வாமா தாக்குதலுக்கு ஆளான குடும்பங்களுக்கு தொடர்ந்து தங்களால் முடிந்த உதவியினை செய்துவரும் இந்திய அணியின் வீரர்கள் நாடு மக்களையும் அவர்களுக்கான உதவிகளை புரியுமாறு கேட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

பேட்ஸ்மேன் சிக்ஸ் அடித்தால் நான் மகிழ்ச்சி அடைந்து ரசிப்பேன். அதன் காரணம் இதுதான் அதனால் எந்த பேட்ஸ்மேன் சிக்ஸ் அடித்தால் நான் ஜாலி ஆகிடுவேன் – குல்தீப் யாதவ் பேட்டி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்