பேட்ஸ்மேன் சிக்ஸ் அடித்தால் நான் மகிழ்ச்சி அடைந்து ரசிப்பேன். அதன் காரணம் இதுதான் அதனால் எந்த பேட்ஸ்மேன் சிக்ஸ் அடித்தால் நான் ஜாலி ஆகிடுவேன் – குல்தீப் யாதவ் பேட்டி

kuldeep

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

Kuldeep

இந்த தொடருக்கான டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர் கொண்ட இரண்டிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார். இந்த தொடருக்கு முன்பாக அவர் வித்தியாசமான பேட்டி ஒன்றினையும் அளித்துள்ளார்.

அதில் குலதீப் யாதவ் கூறியதாவது : நான் எப்போதும் பந்துவீசும் போது என் மனதிற்குள் ஓடுவது என்னவென்றால் எதிர் அணியின் பேட்ஸ்மேன் என் ஓவரில் சிக்ஸ் அடிக்க வேண்டும். அப்படி பேட்ஸ்மேன் சிக்ஸ் அடித்தால் நான் உடனே உற்சாகம் அடைவேன் அதன் காரணம் அவர்கள் விக்கெட்டை வீழ்த்த அவர்கள் எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறார்கள்.

kuldeep

அதனை பயன்படுத்தி பந்தை நன்றாக சுழற்றி அவர்களது விக்கெட்டை நான் வீழ்துஹ்வேன் இதன் காரணமாக நான் பேட்ஸ்மேனை அதிகம் அடிக்க விடுவேன் என்று குல்தீப் யாதவ் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

பி.பி.எல் போட்டியில் அவுட்டான விரக்தியில் மைதானத்தில் இருந்த சேர்-யை அடித்து நொறுக்கிய ஆரோன் பின்ச் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்