இதுவே எங்கள் இலக்கு :என்னாலும் இவராலும் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆடமுடியும். நாங்கள் முதிர்ச்சி அடைந்து விட்டதாக கருதுகிறேன் – ஷிகார் தவான்

Dhawan

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்தியா திரும்பி உள்ளது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வருகிறது.

dhawan

இந்நிலையில் இந்த தொடருக்கு முன் இந்திய அணியின் துவக்க ஆட்டகாரரான ஷிகார் தவான் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் தவான் கூறியதாவது : இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக நானும் ரோஹித்தும் கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணிக்கு சிறப்பான துவக்கத்தினை அளித்து வருகிறோம். தற்போது இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

வரும் உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்த தொடர் அமைய உள்ளது. எனவே இந்த தொடரில் நாங்கள் எங்களது முழு ஆதிக்கத்தை செலுத்த இருக்கிறோம். எங்களால் எந்த சூழ்நிலையிலும், அழுத்தத்திலும் விளையாட முடியும். எங்களுடைய பங்களிப்பு முழுவதையும் இந்திய அணிக்காக தந்து இந்திய அணியை உலகக்கோப்பை தொடரை வெற்றி பெற வைப்பதே எங்கள் இலக்கு என்று தெரிவித்தார்.

rohith dhawan

தவான் மற்றும் ரோஹித் கடந்த ஆறுவருடங்களாக உலகின் அபாயகரமான துவக்க ஜோடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித்தும் தவானும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்.

இதையும் படிக்கலாமே :

டெஸ்ட் தரவரிசையில் 8ஆம் இடத்தில் இருக்கும் நாங்கள் இவர்களின் உதவியுடன் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்போம் – ஹோல்டர் சூளுரை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்