டெஸ்ட் தரவரிசையில் 8ஆம் இடத்தில் இருக்கும் நாங்கள் இவர்களின் உதவியுடன் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்போம் – ஹோல்டர் சூளுரை

Holder
- Advertisement -

ஐ.சி.சி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் 116 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. அடுத்து 110 புள்ளிகளுடன் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இடத்திலும், 107 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

team

இந்நிலையில் தற்போது மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை (2-1) என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் தரவரிசை பட்டியலில் 77 புள்ளிகளுடன் 8 ஆம் இடத்தில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் மே.இ தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் கூறியதாவது : நாங்கள் தற்போது 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஒரு டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறோம். இதனால் எங்கள் அணிக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது. எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் பல ஆண்டுகளுக்கு முன் திகழ்ந்த பலமான அணிக்கு நிகராக பந்துவீசி வருகின்றனர்.

WestIndies

எண்களின் அணியின் இந்த பந்துவீச்சாளர்கள் உதவியுடன் மேற்கு இந்திய தீவுகள் அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியை வீழ்த்தி நம்பர் 1 இடத்தை பிடிக்கும் என்றும், அதற்காக நாங்கள் இனிமேல் தீவிரமாக உழைக்க போகிறோம் என்றும் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இந்த முறை உங்க பப்பு வேகாது முடிந்தால் இந்த உலகக்கோப்பையில் இந்த அணியை வென்று காட்டுங்கள் பார்ப்போம் – சவால் விட்ட மொயின் கான்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -