இந்த தீபத்தை ஒருமுறை ஏற்றினாலே போதும். வாழ்நாள் முழுவதும் உங்கள் குடும்பத்தில் சந்தோஷத்திற்கு ஒரு துளிகூட குறைவிருக்காது. உங்களுடைய வேண்டுதல் 11வது நாளில் நிச்சயம் நிறைவேறும்.

vilakku-deepam

இறைவனிடம் நாம் கேட்கக்கூடிய முதல் வரம் என்ன? நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தானே! நம்மில் பலபேரின் முதல் வேண்டுதல் இதுவாகத்தான் இருக்க முடியும். பணம் காசு, நகை, வீடு, வாசல் வசதி இவை எல்லாம் இரண்டாம் பட்சம். மன நிம்மதியும் சந்தோஷமும் நமக்கு கிடைத்து விட்டால் பணம் காசு வீடு வசதி தானாக நம்மை தேடி வரும். நம்முடைய வாழ்க்கையில் இருள் சூழாமல், கஷ்டம் நம்மை நெருங்காமல், சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் கட்டாயம் தீப வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தந்தே ஆக வேண்டும். எந்த ஒரு வீட்டில் காலை மாலை இருவேளையும் தீபம் ஏற்றி இறைவனை வழிபாடு செய்கிறார்களோ, நிச்சயம் அந்த வீட்டில் கஷ்டம் நெருங்காது என்பது தான் ஐதீகம். அந்த வரிசையில் நம்முடைய வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கை எந்த முறைப்படி ஏற்றினால், இல்லம் சுபிட்சம் அடையும் என்பதை  பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

velli vilaku

நேர்மறை ஆற்றலை நான்கு திசைகளிலிருந்தும் நமக்கு ஈர்த்து கொடுக்கக் கூடிய சக்தி ஸ்வஸ்திக் சின்னத்திற்கு உள்ளது என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். தன தானியம் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், பச்சரிசியில் அன்னபூரணியின் சிலையை வைத்து வழிபாடு செய்வார்கள். பணம் காசுற்க்கு குறைபாடு வரக்கூடாது, வீட்டில் வறுமை என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் இறைவழிபாட்டில் ஒரு ரூபாய் நாணயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த மூன்று பொருட்களை வைத்து தான் நம்முடைய வீட்டில் தினம்தோறும் காமாட்சியம்மன் தீபத்தை ஏற்ற போகின்றோம்.

செம்மண், அதாவது சில பேர் இதை காவி என்றும் சொல்லுவார்கள். முடிந்தவரை செவ்வாய், வெள்ளி கிழமை வீட்டு வாசலில் கோலம் போடும்போது அந்த கோலத்தில் இந்த காவி நிறத்தை சேர்த்துப் போட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். அந்த காவியை சிறிதளவு உங்களுடைய வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

kolam

காவியை சிறிய கிண்ணத்தில் போட்டு, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி குழைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் பன்னீர் இருந்தால் அதை கூட ஊற்றி கொள்ளலாம். அந்தக் காவியை தொட்டு உங்கள் வீட்டு பூஜை அறையில், எந்த இடத்தில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வைக்கிறீர்களோ அந்த இடத்தில், ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ள வேண்டும். அதன் மேல் ஒரு தாம்பூலத் தட்டை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் காமாட்சியம்மன் தீபத்தை நீங்கள் எந்த தட்டில் வைத்து ஏற்றுவீர்களோ, அந்த தட்டை வைத்துக் கொண்டால் போதும்.

- Advertisement -

அந்த தட்டின் மேல் சிறிதளவு பச்சரிசியை நிரப்ப வேண்டும். (கொஞ்சம் பச்சரிசியை தூங்கி விட்டால் கூட போதும்.)அந்த பச்சரிசியில் ‘ஓம்’ என்ற எழுத்தை உங்களது விரல்களால் எழுதிவிட்டு, அதன் பின்பு, அதன் மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, அதன் மேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றவேண்டும். நீங்கள் போடும் திரி, மஞ்சளில் நனைத்து காய வைத்த மஞ்சள் நிற திரியாக இருந்தால் மேலும் சிறப்பானது. காமாட்சி அம்மன் விளக்கு பக்கத்தில் எப்போதும் வாசனை மிகுந்த பூ ஒன்று இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

swastik symbol benefits tamil

எப்போது நீங்கள் பூஜை அறையை சுத்தம் செய்கிறீர்களோ அப்போது ஸ்வஸ்திக் சின்னத்தை துணியால் துடைத்து விடுங்கள். அரிசியை மட்டும் அதே அரிசியை மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ரூபாய் நாணயத்தை தொடர்ந்து அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். மூன்று மாதங்கள் கழித்து அரிசியின் நிறம் மாறிவிட்டால் மட்டும் அதை எடுத்து பறவைகளுக்கு உணவாக போட்டுவிட்டு, மீண்டும் புதிய அரிசியை போட்டுக் கொள்ளுங்கள்.

vilaku

பெரும்பாலும் வியாழக்கிழமை அன்று பூஜை அறையை சுத்தம் செய்வீர்கள் அல்லவா? அப்போது மீண்டும் புதியதாக ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து இதேபோல விளக்கை தயார் செய்து வைத்துவிட்டு தினம்தோறும் விளக்கு ஏற்றும் பழக்கத்தை வைத்து பாருங்கள். நிச்சயம் 11 நாட்களில் உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய தீராத பிரச்சனைகளும் தீரும். உங்களுடைய வேண்டுதலும் கூடிய விரைவில் நிறைவேறும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
கை கடிகாரம் கட்டுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்! இந்த கையில் கை கடிகாரம் கட்டும் பழக்கம் உள்ளவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் நிச்சயம் பண கஷ்டம் வந்து கொண்டே தான் இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.