அனைத்து நன்மைகளும் ஏற்பட வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம்

mumoorthigal dheepam
- Advertisement -

தீப வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது. தீபத்தை நாம் எந்த தெய்வத்தை நினைத்து ஏற்றுகிறோமோ அந்த தெய்வம் தீபத்தில் வந்து அமர்ந்து விடும் என்று கூறப்படுகிறது. எப்பேர்ப்பட்ட தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்தை தீபத்தில் வந்து அமர வைக்க முடியும். அதனால் தான் தீபத்திற்கு அவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது.

எந்த வேண்டுதலை செய்வதாக இருந்தாலும் எந்த வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் அது நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது தீய நிகழ்ச்சியாக இருந்தாலும் கண்டிப்பான முறையில் அந்த இடத்தில் ஒரு தீபம் ஆவது எரிந்து கொண்டுதான் இருக்கும். அவ்வளவு சிறப்பு பெற்ற தீபத்தில் நாம் ஊற்றி ஏற்றக்கூடிய எண்ணெயால் பல பலன்கள் மாறுபடும். எந்த எண்ணெயை பயன்படுத்தி தீபம் ஏற்றினால் மும்மூர்த்திகளின் அருளையும் பரிபூரணமாக பெற முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தீபா வழிபாடு

பொதுவாக பலரும் வீட்டில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறுவார்கள். நல்லெண்ணெய் என்பது சனிபகவானுக்குரிய எண்ணையாக கருதப்படுகிறது. அதனால் ஏதாவது பரிகாரம் செய்வதாக இருக்கும் பட்சத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. நெய் தீபம் என்பது உத்தமம் தான் என்றாலும் மும்மூர்த்திகளான மகாவிஷ்ணு, சிவன், பிரம்மன் இவர்களின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்றக்கூடிய எண்ணெயை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

மேலும் இந்த தீபத்தை நாம் ஏற்றி வைக்கும் பொழுது எந்த திசையை பார்த்து வைக்கிறோமோ அதற்கேற்றார் போல் பலனும் நமக்கு ஏற்படும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். வாழ்க்கையில் அனைத்து விதமான சந்தோஷங்களையும் பெறவேண்டும் என்றால் கிழக்கு பார்த்தவாறு தீபத்தை ஏற்ற வேண்டுமாம். வடக்கு பார்த்து தீபத்தை ஏற்றினால் செல்வநிலை வளர்ந்து கொண்டே செல்லுமாம்.

- Advertisement -

மேற்கு பார்த்து தீபம் ஏற்றினால் மேலும் மேலும் முன்னேறிக்கொண்டே செல்வோமாம். ஆனால் தெற்கு பக்கம் தீபம் ஏற்றினால் தேய்ந்து கொண்டே செல்வோம் என்பதால் தெற்கு பக்கம் தீபம் ஏற்றக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். சரி இப்பொழுது எந்த எண்ணெய் என்பதை தெரிந்து கொள்வோம்.

பொதுவாக கடைகளில் 5 கூட்டு எண்ணை ஏழு கூட்டு எண்ணெய் என்று இருக்கும் அந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று கூறி இருப்பார்கள். ஆனால் அதில் அவர்கள் சொன்ன அந்த எண்ணெயைதான் பயன்படுத்தி இருக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது. அப்படி ஐந்து கூட்டு எண்ணையோ ஏழு கூட்டு எண்ணையோ ஏற்ற வேண்டும் என்ற ஆசைப்படுபவர்கள் தனித்தனியாக அந்த எண்ணையை வாங்கி கலந்து பிறகு ஏற்றுவது தான் சிறப்பு.

- Advertisement -

கலக்கும் பொழுது அதன் அளவு தெரியவில்லை என்று நினைப்பவர்கள் தயவு செய்து தனித்தனியான விளக்குகளில் இந்த எண்ணையை ஊற்றி ஏற்றுவது இன்னும் நல்ல சிறப்பை தரும். நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்க வேண்டும் என்றால் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அப்படி தீபம் ஏற்றும் பொழுது பயன்படுத்தக்கூடிய எண்ணெய்யானது மும்மூர்த்திகளின் அருளை பெற்ற எண்ணையாக இருந்தால் அதன் சிறப்பு இன்னும் அதிகமாக இருக்கும் அல்லவா?

அப்படி மும்மூர்த்திகளின் அருளை பெற்ற மூன்று எண்ணெய்கள் தான் இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய். இந்த மூன்று எண்ணெய்களையும் சரிசமமாக எடுத்து மூன்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை பயன்படுத்தி உங்கள் வீட்டில் காலையிலும், மாலையிலும் தினமும் தொடர்ந்து ஒன்பது நாட்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:குழந்தை வரம் தரும் குலதெய்வ தீபம்

தீபம் ஏற்றும் பொழுது அதில் இந்த சில விஷயங்களை மட்டும் மாற்றிக் கொண்டு ஏற்றினோம் என்றால் கண்டிப்பாக நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -