கோவிலில் குடிகொண்டிருக்கும் தெய்வம் உங்களுடைய வீட்டிலும் குடிகொள்ளும். உங்களுடைய வீடும் கோவிலாக மாறும். இந்த திலகத்தை உங்கள் பூஜை அறையில் பயன்படுத்தினால்.

நம்முடைய வீட்டில் தெய்வங்கள் குடி கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய வீடு நறுமணம் உள்ள வீடாக இருக்க வேண்டும். எப்போதும் கோவிலில் வீசும் நறுமணம் நம்முடைய வீட்டிலும் இருந்தால், கோவிலில் சென்று அடையக்கூடிய மனநிம்மதியை, நம்முடைய வீட்டிலேயே பெறமுடியும். இதனால் கோவிலுக்கு சென்று தெய்வங்களை வழிபட கூடாது என்று சொல்லவில்லை. கோவிலில் குடிகொண்டிருக்கும் தெய்வங்கள் நம் வீட்டிலும் குடிகொண்டு, அருளாசியை வழங்க, நம்முடைய மனது அமைதியை பெற, நம்முடைய வீட்டில் சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அந்த வரிசையில் நாம் இறைவனுக்காக வைக்கக்கூடிய மஞ்சளை இறை ஆகர்ஷன சக்தி கொண்ட மஞ்சளாக எப்படி தயாரிப்பது? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

pachai-karpooram-yelakkai-sombu

சோம்பு இரண்டு ஸ்பூன், ஏலக்காய் 10, பச்சை கற்பூரம் 5 துண்டுகள், கிராம்பு 5, இந்த பொருட்களை எல்லாம் முதலில் மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு, இந்த கலவையோடு மஞ்சளையும் சேர்த்து ஒன்றாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக சிறிதளவு ஜவ்வாது பொடியை இந்த பொடியோடு சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள் பொடியை கலப்பதாக இருந்தால் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் நைசாக அரைத்து விட்டு, மஞ்சள்தூளை கலந்து விட்டு விடுங்கள் அவ்வளவுதான்.

இந்த மஞ்சளை அரைத்தவுடன் சிறிது நேரம் நன்றாக ஆற வைத்து விட்டு, காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டால், ஒரு மாதம் முழுவதும் நம்முடைய வீட்டு பூஜை அறைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மஞ்சள் பொடிக்கு, தெய்வத்தை நம் வீட்டிற்குள் அழைக்கும் சக்தி அதிகமாகவே உள்ளது.

krambu

கொஞ்சமாக இந்த மஞ்சளை எடுத்து சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொண்டு, கொஞ்சம் பன்னீர் ஊற்றி குழைத்து உங்கள் வீட்டில் இருக்கும் தெய்வங்களின் திருவுருவப் படத்திற்கு வைத்துப் பாருங்கள். அதன் பின்பு உங்களுடைய பூஜை அறையும் கோவில் போல், சக்திவாய்ந்த இடமாக மாறுவதை, நீங்களே உணர்வீர்கள். எப்பவும் போல இந்த மஞ்சளை குழைத்து வைத்துவிட்டு, அதன்மேல் குங்குமப் பொட்டை வைக்கலாம்.

- Advertisement -

இதைப்போல் பூஜை ஜாமான்களுக்கு மஞ்சள் குங்குமம் வைக்கும் போதும் இதே ஆகர்ஷண சக்தி நிறைந்த மஞ்சள் பொடியை பயன்படுத்தலாம். உங்கள் வீட்டு நிலவாசப்படியில் தினமும் காலை 6 மணி அளவில் துடைத்து சுத்தம் செய்துவிட்டு, இந்த குங்குமத்தை கொஞ்சம் போல பன்னீர் ஊற்றி குழைத்து, அந்த நிலை வாசல் படியில் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, வாசனை மிகுந்த பூக்களால் அலங்காரம் செய்தால் அந்த மகாலட்சுமியும், நல்ல தேவதைகளும் உங்கள் வீடு தேடி நிச்சயம் வருவார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது.

Turmeric

தெய்வங்களையும், நேர்மறை ஆற்றலையும், சக்திவாய்ந்த தேவதைகளையும் ஈர்க்கக்கூடிய சக்தியானது இந்த கலவையில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களுக்கு அதிகமாகவே உள்ளது. சோம்பு பணத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த ஒரு பொருள். பச்சை கற்பூரத்தை நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். கிராம்பில் மகாலட்சுமி வாசம் செய்கிறார்கள். மஞ்சள் நாம் எப்போதும் பயன்படுத்தும் மங்கலகரமான பொருள். மஞ்சள் எந்த ஒரு கெட்ட சக்தியையும் நம் வீட்டிற்குள் நெருங்க விடாது. ஜவ்வாது பொடிக்கு இறைவனை நம் வசப்படுத்த கூடிய தன்மை கொண்டது.

poojai

உங்களுடைய வீடு கலை இழந்தது  போல இருக்கும் போது, மூதேவி அடைந்த நிலையில் இருந்தால், இந்த பொடியை ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் கொஞ்சமாக கலந்து, அந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விடுவதன் மூலம் உங்கள் வீடு பிரகாசமாகும்.

vasal-kathavu

முதலில் கொஞ்சமான அளவில் இந்த பொடியை அரைத்து, உங்களுடைய வீட்டில் பயன்படுத்தி பாருங்கள். உங்கள் மனதிற்கு பிடித்து இருந்தால், தாராளமாக உங்கள் வீட்டு பூஜை அறைக்கு இந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம். உங்கள் வீடும் தெய்வசக்தி நிறைந்த ஆக மாற, இந்தக் குறிப்பை நீங்கள் பின்பற்றினாலே போதும். இந்தப் பொருட்களின் வாசத்திற்கு நம்முடைய வீட்டிற்குள் எந்த விதமான கெட்ட சக்தியும் எந்த விதமான கண் திருஷ்டியும் உள்ளே நுழைவதற்கு வாய்ப்பு கிடையாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தெரியாமல் கூட இந்த எண்ணெயில் தீபம் ஏற்றவே கூடாது. நம்முடைய குடும்பத்திற்கு பேராபத்து வந்துவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.