அடிக்கடி இந்த வாசம் வீசக்கூடிய வீட்டில் தெய்வ சக்தி நடமாடவில்லை என்று தான் அர்த்தம். இப்படிப்பட்ட வீட்டில் தெய்வ சக்தியை வர வைக்க என்ன செய்வது?

amman
- Advertisement -

சில வீடுகளில் தெய்வ சக்தி என்பது இருக்காது. எவ்வளவுதான் விளக்கு எரிந்து கொண்டு இருந்தாலும், அந்த வீட்டில் இருள் சூழ்ந்த சூழ்நிலை இருக்கும். வீட்டில் கஷ்டங்கள் அடுத்தடுத்து வரும். வீட்டை ஏதோ ஒன்று பிடித்து ஆட்டிப் படைப்பது போல வீட்டில் இருப்பவர்களுக்கு தோன்றும். கஷ்டம் இருக்குது, அப்படின்னு நாம கண்டுபிடிச்சிட்டோம். நம்மையே அறியாமல் சில உணர்வுகள் இந்த கஷ்டத்தை நமக்கு காட்டி கொடுக்கும். உதாரணத்திற்கு வீட்டில் அடிக்கடி கருகிய வாடை வீசும். தீய்ந்து போன வாடை என்று சொல்லுவார்கள் அல்லவா. பிளாஸ்டிக் எரிவது போல, ஒயர் எறிவது போல, முடி கருகுவது போல ஒரு வாடை வீசும். ஆனால், அக்கம் பக்கத்தில் அப்படி வாசம் வீசுவதற்கு எந்த ஒரு அறிகுறியும் தெரியாது. அப்படிப்பட்ட பொருட்கள் எதுவும் எறியாமலேயே இப்படி கருகிய வாடை வீட்டில் வீசக்கூடாது. இப்படிப்பட்ட வாசனை உங்களுடைய வீட்டில் அடிக்கடி வீசினால் அந்த வீட்டில் தெய்வ சக்தியின் நடமாட்டம் இல்லை என்று தான் அர்த்தம்.

அதேபோல எந்த ஒரு வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி கெட்ட வார்த்தையை பேசிக்கொண்டு, அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்களோ அந்த வீட்டில் தெய்வ நடமாட்டம் இல்லை என்று தான்‌ அர்த்தம். தினமும் விளக்கு ஏற்றி வைத்து விட்டால் மட்டும் போதாது. உங்களுடைய வீட்டில் தெய்வ சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டில் சண்டை சச்சரவு அடிக்கடி வந்தாலோ, கெட்ட வாடை வீசிக்கொண்டே இருந்தாலோ இதை எல்லாம் சரி செய்வதற்கு என்ன பரிகாரம் செய்யலாம். ஆன்மீகத்தில் இதற்கு ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது.

- Advertisement -

வீட்டை விட்டு துர்சக்தி அகல, வீட்டில் தெய்வ நடமாட்டத்தை கொண்டு வர செய்ய வேண்டிய பரிகாரம்:
உங்களுடைய வீட்டை ஒட்டடை அடைத்து முதலில் முழுமையாக சுத்தம் செய்து விடுங்கள். பூஜை அறையையும் முழுமையாக சுத்தம் செய்து விடுங்கள். வீட்டை கல் உப்பு சேர்த்த தண்ணீரால் முதலில் சுத்தம் செய்து விட வேண்டும். பிறகு நல்ல தண்ணீரை கொண்டு சுத்தம் செய்து விடுங்கள். வீட்டில் இருந்து நிலை வாசல் வரை தலைகீழாக புரட்டிப் போட்டு வீட்டை சுத்தம் செய்து விட்டு, ஒரு பாத்திரத்தில் சுத்தமான நல்ல தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதில் கல்லுப்பு, இந்து உப்பு, கருப்பு உப்பு, இந்த மூன்று உப்புகளை போட்டு கரைத்து அந்த தண்ணீரை வீட்டிற்குள் இருந்து நிலைவாசல் வரை தெளித்து வரவேண்டும்.

பிறகு கோமியம். கோமியத்தை வாங்கி மாயிலையால் வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். இந்த தண்ணீரை பூஜை அறையிலும் தெளிக்க வேண்டும். மூன்று உப்பு சேர்த்த தண்ணீர், பிறகு கோமியம் இந்த தீர்த்தத்தை பூஜை அறையிலும் தெளித்து விடுங்கள் தவறு கிடையாது.

- Advertisement -

பிறகு மணக்க மணக்க உங்களுடைய வீட்டில் தசாங்கம் ஏற்றப்பட வேண்டும். தசாங்கம் வெறும் வாசனையை மட்டும் கொடுக்கக்கூடிய பொருள் அல்ல. வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை, எதிர்மறையாற்றலை வெளியே விரட்டக்கூடியதும் கூட. இதில் சேர்த்து இருக்கக்கூடிய பொருட்கள் அப்பேர்பட்ட சக்தி வாய்ந்த பொருட்கள். ஆகவே ஊதுவத்தியையும் தசாங்கத்தையும் ஒன்றாக நினைக்காதீங்க. ஊதுவத்தி ஏற்றலாம் தவறு கிடையாது. தினமும் ஊதுவத்தி ஏற்றி இறைவழிபாடு செய்தாலும் வாரத்தில் ஒரு நாள் தசாங்க புகையை வீடு முழுவதும் காண்பிக்கவும்.

இது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அழித்துவிடும். தசாங்கத்தை ஏற்றி வைத்துவிட்டு பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி குலதெய்வத்தின் பெயரை 27 முறை சொல்லி, வீட்டில் இருக்கும் துர்சக்திகள் விலக வேண்டும். வீட்டில் நேர்மறையான விஷயங்கள் நடக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் வரக்கூடாது, என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: எப்போதும் அடிதடி சண்டை சச்சரவு என வெறுப்பாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் மனைவி கூட அன்னோன்யமாக மாற இந்த ஐந்து பவளமல்லி பூ இருந்தால் போதும்.

மனதார இந்த வேண்டுதலை வைத்துவிட்டு உங்களுடைய பூஜையை கற்பூர ஆரத்தி காண்பித்து நிறைவு செய்து கொள்ளுங்கள். வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்து வந்தாலே வீடு சுபிட்சம் பெறும். வீட்டில் லட்சுமி கடாட்சமும் தெய்வ சக்தியும் நிறைவாக தங்கும். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -