தெய்வசக்தி உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க, இந்த தீபத்தை தினம்தோறும் ஏற்றி வழிபாடு செய்தாலே போதும்.

deepam3
- Advertisement -

நம் வீட்டு குலதெய்வமும் நாம் வழிபாடு செய்யும் இஷ்ட தெய்வங்களும் நம் வீட்டு பூஜை அறையில் நிரந்தரமாகக் குடி கொள்ள வேண்டுமென்றால், தீப வழிபாட்டை எப்படி செய்வது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு வீட்டினுடைய பூஜை அறையில் எப்போதுமே இறை அருள், இறை சக்தி நிறைந்திருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் நாம் செய்யக்கூடிய சிறிய தவறின் மூலமாகவும் நம் வீட்டில் இருக்கும் தெய்வ சக்தி நம் வீட்டை விட்டு வெளியே செல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். குலதெய்வமும், இஷ்ட தெய்வமும் நம் வீட்டில் நிறைந்திருந்தால் தான், வீடு சுபிட்சம் பெற்று, வீட்டில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.

vilakku-praying

நம்முடைய வீட்டை எப்போதுமே தெய்வ கடாட்சம் நிறைந்த வீடாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் சக்திவாய்ந்த சிறப்பான தீபத்தை, நேர்மறை ஆற்றலை தெய்வ சக்தியை நம் வீட்டில் ஈர்த்து தரக்கூடிய ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். நமக்கு நன்மை தரக்கூடிய அந்த சிறப்பு வாய்ந்த தீபம் எது. அந்த தீபத்தை நம் வீட்டில் எந்த முறையில் ஏற்றவேண்டும் என்பதைப் பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

முதலில் இந்த தீபம் எப்படி ஏற்றுவது என்று தெரிந்துகொள்வதற்கு முன்பு, ஒரு பொடியை தயார் செய்து வைத்துக் கொள்வோம். இந்த பொடியை தயார் செய்ய 4 பொருட்கள் நமக்கு தேவை. பச்சை கற்பூரம், ஏலக்காய், சோம்பு, கிராம்பு, இந்த நான்கு பொருட்களையும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

copper-vilaku

அடுத்தபடியாக அகல் விளக்கைப் போன்று இப்போது செம்பு விளக்கு கடைகளில் கிடைக்கின்றது. கட்டாயம் இந்த பரிகாரத்திற்க்கு செம்பு விளக்குத்தான் தேவை. செம்பினால் செய்யப்பட்ட 2 விளக்குகள் வாங்கிக்கொள்ளலாம். முடியாதவர்கள் ஒரு தீபம் ஏற்றினாலும் தவறு கிடையாது. விளக்கை சுத்தமாக கழுவி விட்டு, அதற்கு மஞ்சள் குங்கும பொட்டு இட்டு, அதில் சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த அகல் விளக்கில் ஊற்றி இருக்கும் எண்ணெயில் நீங்கள் அரைத்து வைத்திருக்கும் வாசனை மிகுந்த, பொடியை 1/2 ஸ்பூன் சேர்த்து விடுங்கள். அதன் பின்பு அந்த தீபத்தை குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் நினைத்து ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்தின் வாசத்திற்கு, இந்த தீபம் வெளிப்படுத்தக்கூடிய நேர்மறை ஆற்றலுக்கு, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் தெய்வ கடாட்சம் என்றென்றும் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே தான் இருக்கும். எதிர்மறை ஆற்றல் வீட்டில் குடியேற ஒரு துளியும் வாய்ப்பில்லை.

deepam6

வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்க வில்லை, வீட்டில் குலதெய்வம் தெய்வம் குடி இல்லை, வீட்டில் தெய்வ சக்தி இருப்பதற்கான ஒரு அறிகுறியும் இல்லை என்பவர்கள் கூட இந்த தீபத்தை தொடர்ந்து 48 நாட்கள் ஏற்றினால், வெளியே நின்று கொண்டிருக்கும் உங்கள் வீட்டு தெய்வம் உங்கள் வீட்டில் வாசம் செய்ய, வீட்டிற்குள் நிரந்தரமாக தங்க வீட்டிற்கு உள்ளே நுழையும் என்பதுதான் நம்பிக்கை.

முடிந்தவர்கள் இந்த தீபத்தை வெள்ளிக்கிழமை செவ்வாய் கிழமை புதன் கிழமை இந்த மூன்று கிழமைகளில் ஏற்றலாம். காலை அல்லது மாலை உங்களால் எப்போது முடியுமோ அந்த சமயம் இந்த தீபத்தை பூஜை அறையில் ஏற்றி வழிபாடு செய்யலாம். முடியாதவர்கள் வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டுமாவது இந்த தீபத்தை ஏற்றுவது வீட்டிற்கு பல நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -