உங்கள் வீட்டில் எப்போதும் தெய்வ சக்தி நிறைந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கான சில எளிய குறிப்புகள் இதோ.

dheiva-sakthi
- Advertisement -

‘இல்லறமே நல்லறம்” என்கிற பழைய தமிழ் பழமொழி ஒரு அனுபவப் பூர்வமான உண்மையான பழமொழியாகும். “இல்லறம்’ என்கிற சொல்லில் “இல்’ எனப்படுவது நாம் வசிக்கின்ற வீட்டை குறிக்கிறது. தற்போது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களுக்கென்று ஒரு வீட்டில் வசிக்கின்றனர். அப்படி அவர்கள் வசிக்கின்ற வீடு நேர்மறையான சக்திகளால் நிறைந்திருந்தால் மட்டுமே நிம்மதியான ஒரு வாழ்க்கையை அந்த வீட்டில் இருப்பவர்கள் வாழ முடியும். அந்த வகையில் தெய்வீகத் தன்மை வாய்ந்த நேர்மறை சக்திகள் நம் வீட்டுக்குள் நுழைந்து, நிரந்தரமாக தங்கி, நமக்கும் நமது பிற்கால சந்ததியினருக்கும் எல்லாவிதமான நன்மைகளையும் ஏற்படுத்தி நிறைவான வாழ்க்கையை வாழ உதவும் சில எளிய குறிப்புகளை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

Home 2

ஒருவரது வீட்டில் எப்போதும் நேர்மறையான ஆற்றல்கள் தங்கியிருக்க வீட்டில் இருக்கும் பெண்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினத்தன்றும் வீட்டு வாசற்படியை சுத்தம் செய்து, அந்த வாசற்படியில் மஞ்சள் பூசி, குங்குமம் இட்டு வருவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் செல்வ மகளான லட்சுமி தேவி, அந்த வீட்டிற்குள் நிரந்தரமாக தங்கி, அந்த வீட்டில் நிறைவான செல்வம் இருக்கும்படி வழிவகை செய்வாள்.

- Advertisement -

வீட்டின் முன்பாக நிலை வாசற் படிக்கு மேல் ஒரு படிகாரம் கல்லை கருப்புநிற கயிற்றில் கட்டி, தொங்க விட வேண்டும். இப்படிச் செய்வதால் அந்த வீட்டிற்குள் நுழைய முயல்கின்ற எதிர்மறை ஆற்றல்களை அந்தப்படிகாரக்கல் ஈர்த்துக் கொண்டு நாம் வாழும் வீட்டை தீயசக்திகளிடமிருந்து பாதுகாக்கும்.

padikaram1

ஒரு வீட்டின் முன்பாக விநாயகர் படம் அல்லது விநாயகர் சிலை இருப்பது அந்த வீட்டிற்கு இருக்கின்ற வாஸ்து குறைகளை போக்குவதோடு, வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல்கள் நுழையாமல் காக்கிறது. அதிலும் அந்த விநாயகர் சிலை வெள்ளருக்கு மரக்கட்டையால் செய்யப்பட்ட விநாயகர் சிலையாக இருந்து, அந்த வெள்ளெருக்கு விநாயகர் சிலைக்கு தினம் மலர் சாற்றி, தீப தூபம் காட்டி வருவதால் அந்த வீட்டில் வசிப்பவர்களின் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகம் ஏற்படும். உங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கும் சுவறு அல்லது கதவில் செம்புக் கம்பியால் செய்யப்பட்ட “ஓம்” என்கிற பிரணவ மந்திர வடிவத்தை மாட்டி வைப்பதால், வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மைகளை உண்டாக்கும்.

- Advertisement -

சிவன் கோயில்களில் இருக்கின்ற பைரவர் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்ற விபூதியை வாங்கி கொண்டு வந்து, உங்கள் வீட்டின் வெளிப்புற வாயில் பகுதியின் இரண்டு புறமும் சிறிதளவு போட்டு வைப்பதால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு தீய ஆற்றல்களிடமிருந்து பாதுகாப்பை கொடுக்கும்.

vibudhi

உங்கள் வீட்டிற்கு முன்பாக இருக்கின்ற நிலை வாயில் கதவில் “சுவஸ்திக்” சின்னம் அல்லது “திரிசூலம்” சின்னத்தை வரைந்து வைப்பது நல்லது. முருகப்பெருமானின் ஆயுதமான “வேல்” சின்னத்தையும் வீட்டின் கதவுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு மேலாக இருக்கின்ற இடத்திலோ வரைந்து வைப்பது நல்லது. உங்கள் வீட்டின் நிலை வாசலில் இரண்டு புறமும் மஞ்சள் கிழங்கு மாலையை மாட்டி வைப்பது நேர்மறையான ஆற்றல்களை உங்கள் வீட்டுக்குள் நுழைய வழிவகை செய்யும்.

Swastik

உங்கள் வீட்டின் வாயிற்படியின் இரண்டு பக்கத்திலும் மரம் அல்லது மண் கொண்டு செய்யப்பட்ட யானை பொம்மைகளை வைப்பதால் மங்களகரமான பலன்கள் அந்த வீட்டில் இருப்பவர்களின் வாழ்வில் உண்டாகும். மேலும் வீட்டு நிலை வாசல் படியின் மேலாக ஒன்று அல்லது ஏழு குதிரைகள் இருக்கின்ற வகையான படத்தினை மாட்டி வைப்பது உங்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்து, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற செய்யும். குதிரை படம் இல்லாதவர்கள் வண்டி இழுக்கும் குதிரையின் காலில் இருந்து கழண்ட பழைய குதிரை லாடத்தை மாட்டி வைப்பதும் மேற்சொன்ன பலன்களை உங்களுக்கு தரும்.

7-horse

தாங்கள் வசிக்கின்ற வீடுகளில் ஏதாவது ஒரு குறையினால் பொருளாதார ரீதியான கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், மஞ்சளில் தோய்த்த ஒரு பருத்தித் துணியில், பூஜையறையில் பூஜை செய்யப்பட்ட ஒரு தேங்காயை எடுத்து, அந்த மஞ்சள் துணியில் வைத்து, அதனுடன் சிறிது நாணயங்களை வைத்து முடிப்பு போன்று கட்டி, உங்கள் வீட்டு வாயிற்படியில் மேலாக கட்டி வைப்பதால் பணம் சம்பந்தமான பிரச்சினைகளில் உங்களுக்கு நன்மையான பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

- Advertisement -