கோலியின் விக்கெட்டை வீழ்த்துவேன் என்று கூறிய நியூசி பந்துவீச்சாளரை கிழித்து எடுத்த தோனி மற்றும் ஜாதவ் – விவரம் உள்ளே

dhoni

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.

இந்த போட்டி துவங்குவதற்கு முன் நேற்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான பெர்குசன் இந்த போட்டியில் விராட் கோலியினை ரன்களை அடிக்க விடாமல் அவரை வீழ்த்துவேன் என்று சூளுரைத்தார். ஆனால், இன்றைய போட்டியில் கோலி 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களால் 4 விக்கெட்டை மட்டுமே வீழ்த்த முடிந்தது.

இந்நிலையில், இன்று பெர்குசன் வீசிய கடைசி 50ஆவது ஓவரை இந்திய அணியின் தோனி மற்றும் ஜாதவ் எதிர்கொண்டனர். அந்த ஓவரில் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 21 ரன்களை பிரித்து எடுத்தனர். இந்த போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலராக பெர்குசன் உள்ளார். மொத்தம் 10 ஓவர்களை வீசிய அவர் 81 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

ferguson

இதன்மூலம் இந்திய அணி வீரர்கள் அவருக்கு சரியான பாடத்தினை புகுத்தியுள்ளனர். தற்போது 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இதுவரை விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை எடுத்துள்ளது.

இதையும் படிக்கலாமே :

அம்பதி ராயுடுவை பந்தால் அடித்த நியூசி வீரர். கலகலவென சிரித்த கோலி – வைரல் வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்