அம்பதி ராயுடுவை பந்தால் அடித்த நியூசி வீரர். கலகலவென சிரித்த கோலி – வைரல் வீடியோ

Rayudu

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.

shikhar

பின்னர் ஆடிய கோலி 43 ரன்களும் ராயுடு 47 ரன்களையும் குவித்தனர். பின்னர் களமிறங்கிய தோனி இறுதிநேரத்தில் அதிரடியாக விளையாடி 48 ரன்களையும் மற்றும் ஜாதவ் 22 ரன்களையும் குவித்து இந்திய அணி 324 என்ற பெரிய ஸ்கோரினை அடிக்க உதவினர். இந்த போட்டியில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அது யாதெனில் :

ரோஹித் மற்றும் தவான் ஆட்டமிழந்ததை தொடர்ந்து கோலி மற்றும் ராயுடு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கோலி பந்தை அடித்துவிட்டு மறுபுறம் ஓட, பந்தை பிடித்த நியூசிலாந்து வீரர் அதை பிடித்து கீப்பரிடம் எறிந்தார். அந்த பந்து எதிர்பாரா விதமாக ராயுடுவை தாக்கியது. அதனை கண்ட கோலி கலகலவென சிரித்தார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு உங்களுக்காக :

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்க தயாராகி வருகிறது. இந்த ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமானது என்பதால் நியூசிலாந்து அதை எட்டுமா என்று பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே :

டெஸ்ட் போட்டியில் 8ஆவது வீரராக களமிறங்கி 229பந்துகளில் 202ரன்கள் அடித்து அதிரடி இரட்டைசதம் – மே.இ வீரர் சாதனை

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்