ஹார்டிக் பாண்டியாவை ட்விட்டரில் கலாய்த்த தோனி, தவான் மற்றும் கேதார் ஜாதவ்

கடந்த சில நாட்களாகவே பாண்டியாவின் பிரச்சனை வலுத்துவர அவரது கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்திய அணியில் வளர்ந்து வரும் இளம்வீரரான இவரது அணியில் செயல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளார்.

pandiya

மேலும் நியூசிலாந்து தொடரிலும் அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளது இந்திய அணி. இதனால், அவர் வரும் உலகக்கோப்பையில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. தொடர்ந்து பாண்டியா குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தபடி உள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியை சேர்ந்த தோனி, தவான் மற்றும் ஜாதவ் ஆகியோர் பாண்டியனை டிவீட்டரில் மறைமுகமாக கலாய்த்துள்ளனர். அதில் மூவரும் கைகளில் டீ வைத்துக்கொண்டு ஒரு கப் டீ அனைத்தையும் சரியாகும் என்று போட்டோவுடன் பதிவிட்டுள்ளனர். இதோ அந்த பதிவு உங்களுக்காக :

இதற்கு அர்த்தம் யாதெனில், காபி வித் கரண் ஷோவிற்கு சென்றதாலேயே உங்களுக்கு இந்த நிலைமை வந்தது . டீ குடித்துவிட்டு வீட்டில் இருந்து இருந்தால் ஏந்த பிரச்சனையும் வந்திருக்காது என்பதே அந்த அர்த்தம். நாளை காலை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி துவங்க உள்ளது.

இதையும் படிக்கலாமே :

ஆஸி அணியை தோற்கடிப்பது உறுதி. குறிவைத்து ஸ்டம்பை பெயர்க்க பயிற்சி இந்திய அணி பந்துவீச்சாளர் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்