போட்டி முடிந்ததும் கேமரா மேனின் வண்டியில் பயணித்த தல தோனி மற்றும் கிங் கோலி – வைரல் வீடியோ

koli-dhoni

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதலில் 157ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

kuldeep

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 75 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தார். மேலும், கேப்டன் கோலி 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இந்த போட்டியின் பரிசளிப்பு விழா முடிந்தது. அதனை தொடர்ந்து கேப்டன் கோலி மற்றும் தோனி ஆகியோர் செய்த செயல் ரசிகர்களை வியப்பினை ஏற்படுத்தியது. கேமரா மேன்கள் ஒட்டி செல்லும் தானியங்கி கருவியினை கொண்டு அவர்கள் இருவரும் ஜாலியாக வலம்வந்தனர் . இதோ உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு :

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்திய அணி இந்த தொடரில் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் 2ஆவது போட்டி வரும் 26ஆம் தேதி பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இதுவே முதல் முறை. எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்காததில் வருத்தம் இல்லை – இந்திய வீரர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்