இதுவே முதல் முறை. எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்காததில் வருத்தம் இல்லை – இந்திய வீரர்

sami
- Advertisement -

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதலில் ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வில்லியம்சன் 64 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பாக குலதீப் யாதவ் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

ind vs nz trophy

அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி எளிதாக இலக்கினை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான தவான் 75 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 உறுதி செய்தார். மேலும், கேப்டன் கோலி 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

- Advertisement -

இந்நிலையில் குல்தீப் யாதவ் அளித்த பேட்டியில் : நான் சிறப்பாகவே பந்து வீசினேன். மேலும் இந்த பயணமே எனக்கு முதல் நியூசிலாந்து பயணம் ஆகும். எனவே இது எனக்கு சிறப்பான ஒரு தொடராகும் இங்கிருக்கும் மைதானங்கள் சிறியதாக உள்ளன. இதுபோன்ற ஆடுகளில் நேராக பந்துவீசுவது எனக்கு சற்று எளிமையாக இருக்கிறது.

kuldeep

மேலும், எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்காதது பற்றி எந்த வருத்தமும் இல்லை. ஷமி துவக்க ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தான் பின்னல் வந்த வீரர்களுக்கு என்னால் நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. எனவே அணியின் வெற்றி மட்டுமே இப்போது நமக்கு முக்கியம் என்று குல்தீப் யாதவ் கூறினார்.

- Advertisement -

இதுவும் படிக்கலாமே :

தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது . எங்கள் அணியின் தோல்விக்கு இவைகளே காரணம் – கேன் வில்லியம்சன்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -