எம்.எஸ். தோனி : போட்டியின் இடையே பேட்டை மாற்றிய தோனி – வைரல் வீடியோ

Dhoni

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 236 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை எதிர்த்து இந்திய அணி ஆடியது.

Dhoni-six

இந்திய வீரர்கள் ரோஹித், தவான், கோலி மற்றும் ராயுடு ஆகியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தடுமாறிய இந்திய அணியை தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி சிறப்பாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் சேர்த்து போட்டியினை வெற்றிகரமாக முடித்து கொடுத்தனர். 87 பந்துகளில் 81 ரன்கள் குவித்த ஜாதவ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். தோனி சிறப்பாக ஆடி 59 ரன்களை குவித்தார்.

இந்த போட்டியில் 237 என்ற இலக்கினை எதிர்த்து விளையாடிய போது தோனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது தந்து பேட்டினை மாற்றியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

தோணி கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளாயாடிய நான்கு போட்டியிலும் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது தோனியின் ரசிகர்களால் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

IND vs AUS ODI : இன்னும் இவ்வளவு ரன்கள் அடித்திருந்தால் நாங்கள் ஜெயித்திருப்போம் – ஆஸி கேப்டன் பின்ச்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : MS Dhoni changing bat while Chasing against Australia