லாராவை பின்னுக்கு தள்ளி ஜாம்பவான் பட்டியலில் முன்னேறிய நம்ம தல தோனி – தோனி மாஸ்

ms

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர் தோனி அதிரடியாக ஆடி 33 பந்தில் 48 ரன்களை குவித்தார்.

இன்றைய போட்டியில் கடைசி 10 ஓவர்கள் இருக்கும் நிலையில் இறங்கிய தோனி தனது பாணியில் அதிரடியாக ஆடி அணியினை பெரிய ஸ்கோர் எடுக்க உதவினார் . மேலும், இந்த போட்டியில் அவர் அடித்த 48 ரன்கள் மூலம் முன்னாள் மேற்கு இந்திய ஜாம்பவானான லாராவின் சாதனையை அவர் பின்னுக்கு தள்ளி முன்னேறி உள்ளார்.

அதன்படி, லாரா 299 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 10405 ரன்களை அடித்துள்ளார். இந்நிலையில் இன்று நடந்த போட்டியோடு தோனி 337 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 10414 ரன்களை அடித்து ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை அடித்தவீரர் பட்டியலில் லாராவை பின்னுக்கு தள்ளி தோனி முன்னேறியுள்ளார். இந்த சாதனை மிக அரிதான ஒன்றாகும்.

dhoni

ஏனெனில், லாரா துவக்க வீரராக களமிறங்கி மற்றும் முன்வரிசை ஆட்டக்காரராக களமிறங்கி இவ்வளவு ரன்களை குவித்துள்ளார். ஆனால், தோனி பின்வரிசையில் இறங்கி இவ்வளவு ரன்கள் அடித்துள்ளார் என்றால் அது அவருடைய விளையாட்டின் திறனை காண்பிக்கும் ஒன்றாகவே உள்ளது.

இதையும் படிக்கலாமே :

டீவில்லியர்ஸை விட உண்மையில் ரோஹித் தான் ஹிட்மேன் – புள்ளிவிவரம் இதோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்