டீவில்லியர்ஸை விட உண்மையில் ரோஹித் தான் ஹிட்மேன் – புள்ளிவிவரம் இதோ

hitman

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டாஸ் 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்களை குவித்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் 87 ரன்களையும் தவான் 66 ரன்களையும் குவித்து சிறப்பான துவக்கத்தினை அளித்தனர்.

rohith

325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் ப்ரேஸ்வெல் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அனைவரும் அணி 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குலதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகன் விருது ரோஹித் சர்மாவிற்கு கிடைத்தது.

இந்நிலையில் ரோஹித் உலகின் அபாயகரமான வீரர் என்கிற புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. அதன்படி கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2019ஆம் ஆண்டு ஜனவரி வரை நடந்த சர்வதேச போட்டிகளில் ரோஹித் சர்மா 300 சிக்ஸர்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக டிவில்லியர்ஸ் 178 சிக்ஸர்களையும் அதற்கு அடுத்து குப்தில் மற்றும் மோர்கன் ஆகியோர் 171 சிக்ஸர்களை அடித்துள்ளனர்.

rohith sarma

இதன் மூலம் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தின் பலம் தெரியவந்துள்ளது. மேலும், சதமடிக்கும் வரை பாலுக்கு பால் ரன் அடிக்கும் இவர் அதற்கு மேல் மிக வேகமாக சிக்ஸர்களை பறக்கவிட்டு அதனை இரட்டைசதமாக மாற்றும் திறன் உள்ளவர். இதுவரை ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டைசதத்தினை அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ரன்குவிப்பு 264 என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இந்த பாட்னர்ஷிப் சச்சின் கங்குலியை நியாபக படுத்துகிறது – சுனில் கவாஸ்கர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்