தேசியக்கொடி ஏந்தி மைதானத்திற்குள் ஓடிவந்த தோனி ரசிகன். மெய்சிலிர்க்க வைக்கும் செயலை செய்த தல தோனி – வைரல் வீடியோ

Dhoni

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Team

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தி
ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 றன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

இந்த போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது தோனி ரசிகர் ஒருவர் இந்திய தேசியக்கொடி ஏந்தி ஓடி வந்து தோனியின் காலில் விழுந்தார். அப்போது உடனடியாக காலுக்கு கீழ் தேசியக்கொடியினை இருக்கவிடாமல் அதை கையில் எடுத்து பின்னர் அந்த ரசிகரை வாழ்த்தி அனுப்பினார் தோனி. தோனியின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த விடேவ்வ் இணைப்பு :

உலகின் எந்த நாட்டிற்கு சென்றாலும் தோனியின் ரசிகர்கள் என்று தனி கூட்டமே அவருக்காக உள்ளது. தோணி இந்திய அணியின் ஜாம்பவான் என்பதற்கு இதை தவிர்த்து வேறென்ன வேண்டும். இந்த தகவல் குறித்த உங்களது கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள் நண்பர்களே .

இதையும் படிக்கலாமே :

போராடி 4 ரன் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி. கார்த்திக் மற்றும் குருனால் மனம்தராமல் போராடி 28 பந்துகளுக்கு 63 ரன்கள் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்