போராடி 4 ரன் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி. கார்த்திக் மற்றும் குருனால் மனம்தராமல் போராடி 28 பந்துகளுக்கு 63 ரன்கள் – வீடியோ

Dinesh

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்திய வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Seifert

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 றன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

இந்த போட்டியில் 15.2 ஓவரில் தோனி ஆட்டம் இழந்தார் இனி இந்தியா அவ்வளவு தான் என்று நினைத்த நிலையில் கார்த்திக் மற்றும் குருனால் பாண்டியா அதிரடியா விளையாடி 28 பந்தில் 63 ரன்கள் குவித்து 4 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டனர். இதோ உங்களுக்காக அந்த சிறப்பான இன்னிங்ஸ் :

இன்னும் வெகுசில பந்துகள் இவர்களுக்கு கிடைத்திருந்தால் இந்திய அணி சாதனை சேசிங் செய்து போட்டியினை வெற்றிகரமாக முடித்திருக்கும்.

இதையும் படிக்கலாமே :

வெளுத்து எடுத்த நியூசி இந்த மேட்சும் போச்சா. இமாலய இலக்கினை நிர்ணயித்த நியூசி. சாதிக்குமா ரோஹித்தின் படை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்