தோனிக்கு நேற்று நடந்த போட்டியே நியூசிலாந்தில் கடைசி போட்டி என்பதால் தல தோனிக்கு நெகிழ்ச்சியான பிரியாவிடை கொடுத்த நியூசி ரசிகர்கள் – வைரல் வீடியோ

ms

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Ms

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 றன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

நேற்று இந்த போட்டியில் பங்கேற்ற தோனிக்கு இதுவே நியூசிலாந்து மண்ணில் கடைசி போட்டி என்பதால் நியூசிலாந்து ராசிகள் மற்றும் இந்திய ரசிகர்கள் எழுந்து நின்று பலத்த கரகோஷத்துடன் வரவேற்பினை அளித்தனர். இதனால் களமிறங்கிய தோனி நெகிழ்ச்சியுடன் விளையாட சென்றார். இதோ அந்த வீடியோ இணைப்பு :

இதில் ஒரு ரசிகர் தோனியை மகிழ்ச்சியுடன் வழி அனுப்புகிறோம் என்று கையில் பதாகை ஏந்தியபடி நின்று ஆர்ப்பரித்து கொண்டிருந்தார். இதனை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். தோனியின் ஆட்டத்திற்கு உலகமெங்கும் வெறித்தனமான ரசிகர் கூட்டம் இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பதிவினை பற்றிய உங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் நீங்கள் பதிவிடலாம் நண்பர்களே.

இதையும் படிக்கலாமே :

இந்த மாதம் இறுதியில் துவங்க இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரை வித்தியாசமான முறையில் சேவாக்-யை வைத்து விளம்பரப்படுத்திய – ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்