இந்த மாதம் இறுதியில் துவங்க இருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரை வித்தியாசமான முறையில் சேவாக்-யை வைத்து விளம்பரப்படுத்திய – ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

Sehwag

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரேயான கிரிக்கெட் தொடர் இந்த மாத இறுதியில் (24-02-2019) பிப்ரவரி 24ஆம் தேதி துவங்குகிறது. ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணமாக இந்த மாதம் இறுதியில் இந்தியா வருகிறது.

lose

இவ்விரு அணிகளுக்கும் இடையே 2 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டு தொடர்கள் நடைபெற உள்ளன. ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களை இந்திய அணி வீழ்த்தியதால் இம்முறை அவர்கள் இந்திய அணியை வீழ்த்தும் நோக்கத்தோடு இந்த தொடரில் செயல்படுவார்கள். எனவே இந்த தொடர் ரசிகர்களுக்கு விருந்து என்றே கூறவேண்டும்.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்த தொடரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உள்ளது.இந்த தொடரை விளம்பரப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் ஒரு வித்தியாசமான விளம்பரம் ஒன்றினை இந்திய அணி முன்னாள் வீரரான சேவாக் மூலம் விளம்பரப்படுத்திவருகிறது. இதோ அந்த வீடியோ :

ஆஸ்திரேலிய தொடரில் அந்த அணியின் கேப்டன் டிம் பெயின் கூறிய “பேபி சிட்டர்” என்ற வார்த்தை பிரபலமடைந்தது. அதனை மையமாக வைத்து இந்த விளம்பரத்தில் குழந்தைகளை பராமரிப்பவராக சேவாக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

தினேஷ் கார்த்திக் இறுதி ஓவரில் அந்த ஒரு ரன் ஓடி இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். அவர் செய்த சிறிய தவறு தோல்வியை தந்தது – சஞ்சய் மஞ்சுரேக்கர் ட்வீட்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்