எம்.எஸ்.தோனி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோனி விளையாடமாட்டார் – அதிகாரபூர்வ அறிவிப்பு

Ms

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை துவங்க உள்ளது.

Dhoni

இதற்காக இரு அணி வீரர்களும் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி நாளைய போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்று வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தோனியின் வலது கை மணிக்கட்டு பகுதியில் பலமாக பந்து தாக்கியுள்ளது.

இதனால் இந்திய அணியின் மருத்துவ ஆலோசகர் கூறியதாவது : தோனியின் காயத்தின் தீவிரம் இன்று மாலையே தெரிய வரும். அவருக்கு வலது கை மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் அதிகரித்தால் அவர் நாளைய போட்டியில் விளையாட முடியாத சூழல் உண்டாகும். காயத்தின் தன்மை பொறுத்தே அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்று இன்று மாலை தெரியவரும்.

Pant

அப்படி தோனி போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை எனில் அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கீப்பிங் செய்வார் என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனியின் இந்த காயம் அவரது ரசிகர்களை பெருமளவில் பாதித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

சேவாக் : உங்கள நம்பினா நான் அவ்வளவு தான் என்று கோலியை கேள்வி கேட்ட சேவாக்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview – Dhoni got injured in nets