அதிர்ஷ்டத்தால் அவுட்டிலிருந்து தப்பிய தோனி . அப்பீல் செய்யாத ஆஸி வீரர்கள் – வீடியோ

MS

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று (18-01-2019) மெல்போர்ன் நகரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் போட்டியில் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய முடிவு எடுத்தார். அதன்படி முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த 50 ஓவர்களில் 230 ரன்களை குவித்தது.

lose

231 இலக்கினை எதிர்த்து விளையாட துவங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் மற்றும் தவான் பொறுமையாக விளையாட துவங்கினர். ஆனால், அவர்களால் நிலைத்து நின்று விளையாட முடியாமல் ரோஹித் 9 ரன்னிலும் தவான் 23 ரன்னிலும் வெளியேறினர். கோலி மற்றும் தோனி ஓரளவிற்கு சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். கோலி 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் பீட்டர் சிடில் வீசிய பந்தில் தோனி அடிக்க முயன்றார். அப்போது பந்து தோனியின் பேட்டின் உள்பகுதியில் பட்டு கீப்பரிடம் கேட்ச் ஆனது. ஆனால், ஆஸ்திரேலியா வீரர்கள் அதனை பெரிதாக அப்பீல் செய்யவில்லை. எனவே, அதிர்ஷ்டத்தால் தோனி அவுட்டிலிருந்து தப்பித்தார். ஸ்னிக்கோ மீட்டரில் பந்து பட்டது தெளிவாக தெரிகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

தற்போதுவரை இந்திய அணி 45 ஓவர்களில் 187 ரன்களை அடித்துள்ளது. இன்னும் இந்திய அணி வெற்றிபெற 43 ரன்கள் தேவை. 30 பந்துகளில் 43 ரன்கள் அடிக்க வேண்டும். களத்தில் தோனி மற்றும் ஜாதவ் உள்ளானர். இந்திய அணியின் வெற்றி இன்னும் சிறிது நேரத்தில் தெரிந்துவிடும்.

இதையும் படிக்கலாமே :

6 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார சாதனை ஆஸ்திரேலிய அணியை அசைத்த சாஹல் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்