6 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார சாதனை ஆஸ்திரேலிய அணியை அசைத்த சாஹல் – வீடியோ

chahal
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி இன்று (18-01-2019) மெல்போர்ன் நகரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் போட்டியில் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய முடிவு எடுத்தார். அதன்படி முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. பின்ச் மற்றும் கேரி துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

rayudu

தொடரின் ஆரம்பத்திலிருந்தே இந்திய அணிக்கு எதிராக பேட்டிங் செய்ய திணறிவரும் பின்ச் 14 ரன்களிலும் கேரி 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் கவாஜா மற்றும் ஆட்டமிழந்தனர். ஜோடி ஓரளவுக்கு தாக்கு பிடித்து விளையாடியது. கவாஜா 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மார்ஷ் 39 ரன்களை அடித்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலியா அணியின் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். கவாஜா,மார்ஷ்,ஹாண்ட்ஸ்கோம்ப்,ஸ்டோனிஸ்,ரிச்சர்ட்சன் மற்றும் ஜாம்பா ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியை திணறடித்தார். அவரது விக்கெட் தொகுப்பு வீடியோ இணைப்பு இதோ:

- Advertisement -

231 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி தற்போது வரை 39 ஓவருக்கு 158 ரன்களை அடித்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 73 ரன்கள் தேவை.

இதையும் படிக்கலாமே :

ஜாண்டி ரோட்ஸ் போல ரன்னிங்கில் பறந்து கேட்ச் பிடித்த இந்திய வீரர் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -