எம்.எஸ். தோனி : ஹெலிகாப்டர் ஷாட் போன்று சிக்ஸ் அடித்து அமர்க்கள படுத்திய தல தோனி – வைரல் வீடியோ

Dhoni-six

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 236 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை எதிர்த்து இந்திய அணி ஆடியது.

dhoni-jadhav

இந்திய வீரர்கள் ரோஹித், தவான், கோலி மற்றும் ராயுடு ஆகியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தடுமாறிய இந்திய அணியை தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி சிறப்பாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் சேர்த்து போட்டியினை வெற்றிகரமாக முடித்து கொடுத்தனர். 87 பந்துகளில் 81 ரன்கள் குவித்த ஜாதவ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். தோனி சிறப்பாக ஆடி 59 ரன்களை குவித்தார்.

இந்த போட்டியில் 77 பந்துகளில் 79 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி அடித்த ஒரு சிக்ஸ் பழைய தோனியை நினைவுக்கு கொண்டுவந்தது. அந்த அளவிற்கு பிரமாதமான ஒரு சிக்ஸ் அடித்தார் தோனி இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ இணைப்பு :

இந்த வீடியோ தற்போது இணையத்தில் தோனி ரசிகர்கள் மோளம் அதிக அளவு பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும், தோனி ஓய்வு பெற உள்ள நிலையில் இவரின் ஆட்டம் மிகச்சிறப்பாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

விராட் கோலி – வெற்றிக்கு முழுக்காரணம் இந்த கூட்டணி தான் – கேப்டன் கோலி – பெருமிதம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Dhoni is back Again vintage style six