விராட் கோலி – வெற்றிக்கு முழுக்காரணம் இந்த கூட்டணி தான் – கேப்டன் கோலி – பெருமிதம்

Kohli

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 236 ரன்களை குவித்தது. இதனால் இந்திய அணிக்கு 237 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை எதிர்த்து இந்திய அணி ஆடியது.

Toss

இந்திய வீரர்கள் ரோஹித், தவான், கோலி மற்றும் ராயுடு ஆகியவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தடுமாறிய இந்திய அணியை தோனி மற்றும் கேதார் ஜாதவ் ஜோடி சிறப்பாக ஆடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 141 ரன்கள் சேர்த்து போட்டியினை வெற்றிகரமாக முடித்து கொடுத்தனர். 87 பந்துகளில் 81 ரன்கள் குவித்த ஜாதவ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார். தோனி சிறப்பாக ஆடி 59 ரன்களை குவித்தார்.

இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய கேப்டன் கோலி : இந்த போட்டி வெற்றி பெறுவதற்கு சற்று கடினமான போட்டியாகும். ஏனெனில் விளக்கு வவெளிச்சத்தின் கீழ் இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினமாக இருந்தது. இந்திய அணி 99 ரங்களுக்கு 3 விக்கெட்டை இழந்த போது தோனி களமிறங்கினார். ஆட்டத்தின் போக்கை ப்புரிந்து நிதானமாக ஆடிய அவர் ஜாதவ் உடன் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து இந்திய அணிய வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இந்த ஜோடி நிச்சயம் சிறப்பாக ஆடியது. அவர்களின் அனுபவம் இந்த போட்டி மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் பின்வரிசை ஆட்டக்காரர்களால் இந்த வெற்றி கிடைத்ததால் அணியின் பலம் மேலும் கூடி இருக்கிறது மகிழ்ச்சிதான் என்று கோலி பேட்டி அளித்தார் .

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

IND vs AUS ODI : பின்ச்சை போன்று முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறிய தவான் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Dhoni and Jadhav pair gets classic run chase