இந்தியா பாகிஸ்தான் போட்டி பற்றி இப்போது எதுவும் பேச விரும்பவில்லை. அதற்கும் முன் ஒரு கடமை இருக்கிறது. தற்போது அதுதான் முக்கியம் – விராட் கோலி

Kohli

கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

pulwama

அதன்காரணமாக இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டிகளில் ஆடக்கூடாது. மேலும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் கோலி கூறியதாவது : இந்திய அணி உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் மோதுவது குறித்து இந்திய அணி நிர்வாகம் மற்றும் மத்திய அரசும் நிர்ணயிக்கும் அதன்படியே இந்திய அணியும் செயல்படும். அது எந்த முடிவாக இருந்தாலும் சரி அதற்கு இந்திய அணி கட்டுப்படும் என்று கோலி கூறினார். மேலும், இந்திய அணிக்கு தற்போது முக்கிய கடமை ஒன்று உள்ளது.

yo yo test

அது என்னவென்றால், தற்போது நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி கவனம் செலுத்தி நம்முடைய ஆட்டத்தினை மேம்படுத்த வேண்டும். அதுவே உலகக்கோப்பை தொடரில் நமக்கு உற்சாகத்தையும் மற்றும் உத்வேகத்தினையும் தரும். அதையே இந்திய அணி செய்ய உள்ளது ன்று கோலி கூறினார்.

இதையும் படிக்கலாமே :

ஐ.பி.எல். தொடரின் டெல்லி அணி வீரர்களின் புதிய சீருடை அறிமுகம். ஆஹா செமயா இருக்கு – புகைப்படம் உள்ளே

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்