37வயதில் முச்சதம் அடித்து தோனி அசத்தல். முதல் இந்திய வீரர் படைத்த அறிய சாதனை – விவரம் உள்ளே

msd

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Dhoni

அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 212 ரன்களை குவித்தது. நியூசிலாந்து சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் முன்ரோ 40 பந்தில் 72 ரன்கள் குவித்து அசத்தி ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த இமாலய இலக்கினை துரத்திச்சென்ற இந்திய அணி அதிர்ஷ்ட வசமின்றி வெறும் 4 ரன் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.

நேற்று தோனி பங்கேற்ற இந்த போட்டியானது தோனியின் கடைசி நியூசிலாந்து போட்டி மற்றும் அவரின் 300 ஆவது டி20 போட்டியாகும். இதுவரை இந்திய அணி பங்கேற்ற சர்வதேச டி20 போட்டி 96 போட்டிகளிலும் ஐ.பி.எல் போட்டிகளில் 175 போட்டிகளும், லிஸ்ட் ஏ பிரிவில் 29 போட்டிகள் என 300 டி20 போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையினை பெற்றார்.

dhoni

இவருக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா 298 போட்டிகள், ரோஹித் சர்மா 296 போட்டிகள் மற்றும் தினேஷ் கார்த்திக் 260 போட்டிகள் என அடுத்தடுத்த இடத்தில உள்ளனர்.

இதையும் படிக்கலாமே :

முஷ்டாக் அலி டி20 பயிற்சி : தலையில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட களத்தில் மயங்கிய முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் – வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்